பாஜக 400 சீட் வென்றால் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் விஸ்வநாதர் கோவில் கட்டப்படும்: அசாம் முதல்வர்
டெல்லி: பாஜக 400 இடங்களை வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 4வது கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. தேர்தல் பிரச்சாரங்களின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் லஷ்மி நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மல்ஹோத்ராவை ஆதரித்து பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் வைக்கப்படவில்லை. ஒரு காஷ்மீர் இந்தியாவிலும் மற்றொன்று பாகிஸ்தானிலும் உள்ளது என்று எங்களிடம் கூறப்பட்டது.
தற்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து வருகிறது, மக்கள் தங்கள் கைகளில் இந்திய மூவர்ணக் கொடியைப் பிடித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இனி அப்படி இருக்காது. பாஜக 400 இடங்களைப் பெற்றால் விரைவில் பிரதமர் மோடியின் தலைமையில் காஷ்மீர் நமது நாட்டின் ஒரு பகுதியாக மாறும்.” என்றார்.
மேலும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றி விடுவார்கள் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டை நிராகரித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, 400 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்தால் மதுரா மற்றும் வாரணாசியில் கோயில்களைக் கட்ட உதவும் என்றார்.
ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், “சச்சின் டெண்டுல்கரை ஏன் டபுள் செஞ்சுரி, ட்ரிபிள் செஞ்சுரி அடித்தார் என்று கேட்பீர்களா? 300 சீட்கள் இருந்தபோது ராமர் கோயில் கட்டினார் மோடி. இப்போது 400 இடங்கள் கிடைத்தால் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி உருவாகும். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை மாற்றுவோம். அங்கு பாபா விஸ்வநாதருக்கு ஒரு பெரிய கோவில். எழுப்புவோம். முகலாயர்களால் பரப்பப்பட்ட குழப்பத்தை நீக்குவோம்" என்று கூறியுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications