கனவில் வந்து கடவுள் கூறினார்.. அதான் 2 வயது மகளை ஆற்றில் வீசினேன்.. தந்தை பரபரப்பு வாக்குமூலம்
Recommended Video
டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் கடவுள் கூறியதால் மகளை ஆற்றில் வீசியதாக கூறிய தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் டமால்பூரை சேர்ந்தவர் பீர்பால் பாரோ (35). இவரது மனைவி ஜூனு பாரோ (30). இவர்களுக்கு 2 வயதில் ரிஷிகா என்ற மகள் உள்ளார்.
கடந்த சனிக்கிழமை அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார் பீர்பால். சிறிது நேரம் கழித்து தனியாக வீட்டுக்கு வந்தார்.

ஆற்றில் தேடுதல்
உடனே குழந்தை எங்கே என ஜூனு கேட்டார். அதற்கு அவர் போர்லா ஆற்றில் மகளை தள்ளிவிட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜூனு, தனது உறவினர்களிடம் கூறி குழந்தையை ஆற்றில் தேடினார்.

குழந்தையின் சடலம்
அப்போது குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் கூறியதை அடுத்து தீயணைப்பு துறையினர் குழந்தையை தேடினர். அப்போது ஆற்றிலிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பீர்பால் கைது
இதையடுத்து போலீஸார் பீர்பாலை கைது செய்து விசாரித்த போது கடவுள் எனது கனவில் வந்து இது போல் மகளை ஆற்றில் வீச கூறினார். அதனால் நானும் ஆற்றில் வீசினேன் என தெரிவித்துள்ளார்.

பில்லி சூனியம்
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால் பில்லி சூனியத்தை நம்பினார், மந்திரவாதியின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பெற்ற குழந்தை
மன நிலை சரியில்லாதவர் போல் இருப்பதால் இவர் மந்திரவாதியின் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி செய்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications