உச்சக்கட்ட பதற்றத்தில் அசாம்! திடீர் வன்முறையால்.. மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கம்!
டெல்லி: அசாம் மாநிலத்தின் சிராங் மற்றும் கோக்ராஜர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அதன் விளைவாக மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 16ம் தேதியன்று இரவு, இந்தியா-பூடான் எல்லையில் உள்ள சிராங் மாவட்டத்தின் ருனிகாடா பகுதியில் வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது 25 பழங்குடி மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அரசு வாகனங்களுக்குத் தீ வைத்தனர். மேலும், வனச்சரகர் அலுவலகத்தையும் கொளுத்த முயன்றனர். இதனையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த, வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
சிராங் மாவட்டத்தில் தொடங்கிய இந்த பதற்றம், பக்கத்து மாவட்டமான கோக்ராஜருக்கும் பரவியுள்ளது. அங்கு பெரிய அளவிலான மக்கள் கூட்டங்கள் கூடுவது மற்றும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடப்பது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும், சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதைத் தவிர்க்கவும் அசாம் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய தந்திச் சட்டம் மற்றும் 2017-ஆம் ஆண்டின் தற்காலிக தொலைத்தொடர்பு சேவைகள் இடைநீக்க விதிகளின் கீழ் மொபைல் இன்டர்நெட் மற்றும் டேட்டா சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
சாதாரண வாய்ஸ் கால்கள் மற்றும் லேண்ட்லைன் மூலம் வழங்கப்படும் பிராட்பேண்ட் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 மற்றும் இந்திய தந்திச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
நிலைமையை உயர்மட்ட அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் அமைதி காக்குமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications