கியரை மாற்றும் "கதர் கட்சி".. பக்கா பிளானுடன் கோவா பறக்கும் பிரியங்கா.. பாஜகவிற்கு செக்..?
கோவாவில் நாளை முதல் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிகிறது
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சார பயணம் காங்கிரசுக்கு அசுர பலத்தை பெற்று தருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.. இதற்காக அந்தந்த மாநில கட்சிகள் தீவிரமான களப்பணியில் இறங்கி வருகின்றன.
குறிப்பாக, இந்த தேர்தல்களில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.. இதற்கான புது புது வியூகங்களையும் வகுத்து, பிரசாரத்தில் ஈடுபட்டும் வருகின்றன.

தெம்பு
அந்த வகையில் காங்கிரஸ் கூடுதலாகவே அக்கறை செலுத்தி வருகிறது.. ஆனால், தலைவரே இல்லாமல் ஒரு தேசிய கட்சி 3 வருஷமாக இயங்கி கொண்டிருப்பது காங்கிரஸ் தொண்டர்களை ஏற்கனவே சோர்வடைய வைத்துள்ளது.. கட்சிக்கு இது பலவீனமாகி கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் பாஜகவுக்கு தெம்பாகி கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்லாமல், சமீப காலமாகவே கட்சி விலகல் ஆரம்பமாகி உள்ளது.. அக்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க மம்தா ஒரு பக்கம் களமிறங்கி வருகிறார்.. இன்னொரு பக்கம் பாஜக முயன்று வருகிறது.

கட்சி விலகல்
ஏற்கனவே பஞ்சாப்பில் வலுவாக இருந்த காங்கிரஸ் மெல்ல மெல்ல தன்னுடைய செல்வாக்கையும் இழக்க ஆரம்பித்துவிட்டது.. முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், அதிருப்தியில் இருந்தபோதே அவரை சரிக்கட்ட முயன்றும் முடியாமல் தோற்றது காங்கிரஸ் மேலிடம்.. அவர் கட்சியை விட்டு விலகிய பிறகு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கியதுடன், பாஜகவுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு இன்று வந்துவிட்டார்..

காங்கிரஸ்
இப்படி பஞ்சாப்பை கண்ணெதிரே நழுவவிட்டதைபோலதான், கோவா காங்கிரஸிலும் சறுக்கல் நடந்து வருகிறது.. மம்தாவின் அதிரடிகள் கோவாவின் சீனியர்களை கவர்ந்தாலும், பாஜக அதை தட்டிப்பறிக்க முயலவே பிளான் போட்டு வருகிறது.. கடந்த 2017 தேர்தலில், அங்குள்ள மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17-ல் வெற்றி பெற்றது.. ஆனால் 13 தொகுதிகளில் வென்ற பாஜகவோ மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது... இதற்கு பிறகு, காங்கிரஸில் இருந்து பல எம்எல்ஏக்கள் மெல்ல மெல்ல விலகினர்.. அதில் பலர் பாஜகவிலும் இணைந்தனர்..

கோவா
அப்போதும் காங்கிரஸ் மேலிடம் அமைதியாகத்தான் வேடிக்கை பார்த்தது.. இப்போது தேர்தலுக்கு அந்த மாநிலம் தயாராகி வரும் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்ததே மிக முக்கிய புள்ளிகள் விலக ஆரம்பித்துவிட்டனர்.. முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரா, காங்கிரஸில் இருந்து விலகி மம்தா கட்சியில் இணைந்தார். அடுத்து, மாஜி முதல்வரான ரவி நாயக்கும் 2 நாட்களுக்கு முன்பு விலகினார்.. அத்துடன் தன்னுடைய எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.. இவர் எப்படியும் பாஜகவில்தான் இணைவார் என்று இப்போதே முணுமுணுக்கப்பட்டு வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இவர் இணைய போவதாக செய்திகளும் கசிந்து வருகின்றன.

பிரியங்கா காந்தி
இப்போது சிக்கல் என்னவென்றால், இவரது ராஜினாமாவை தொடர்ந்து, அம்மாநில சட்டசபையில் காங்கிரஸின் பலம் 3ஆக குறைந்துள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களமிறங்குகிறார்.. கடந்த ஒரு வருட காலமாகவே உத்தர பிரதேசத்தில் களப்பணியை நேரடியாக இறங்கி கவனித்து வருகிறார் பிரியங்கா.. தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.. நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.. ஆனால் பாஜக எப்போதோ கோவாவில் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது..

மம்தா பானர்ஜி
அதேபோல, அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும், ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்... பிரியங்கா காந்தி நாளை முதல் கோவாவில் பிரசாரத்தை தொடங்குகிறார்... மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.. கோவாவில் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், அதிருப்தியாளர்கள் மாற்று கட்சிக்கு தாவி வரும் நிலையில், பிரியங்காவின் வருகை எந்த அளவுக்கு அம்மாநிலத்துக்கு பலம் சேர்க்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications