ராஜஸ்தான் முதல் தெலுங்கானா வரை.. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்! டெய்லிஹன்ட்டில் நேரலையாக
டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மிசோரத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்த நிலையில், அது திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை, இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன. இந்த 5 மாநிலச் சட்டசபைகளின் பதவிக்காலம் என்பது டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 வரையிலான காலத்தில் காலாவதியாகிறது.

இந்த தேர்தல்கள் பாஜக, காங்கிரஸ் மற்றும் இதர பிராந்தியக் கட்சிகளுக்கு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடக்கும் இந்தத் தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து கட்சிகளும் களமிறங்குகிறது.
இந்த ஐந்து மாநிலங்களில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸும், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியில் உள்ளன. தெலுங்கானாவில் கே.சி.ஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், மிசோரம் மாநிலத்தில் மிசோ நேஷனல் ஃப்ரண்ட் (எம்என்எஃப்) ஆட்சியிலும் உள்ளது.
டெய்லிஹன்ட்டில் நேரலையாக
இந்தியாவில் நடக்கும் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை டெய்லிஹன்ட் நேரலையாக ஒளிபரப்பி வருகிறது. தேர்தல்கள் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானது இல்லை. அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தரவுகளை விளக்கி எளிமையாகவும் துல்லியமாகவும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம்பெறும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, பல்வேறு கோணங்களிலும் விரிவான ஆய்வுக்கட்டுரையை நாங்கள் வழங்க உள்ளோம். அரசியல் தெரியாமல் இருக்கும் இளைஞர்கள் முதல் வல்லுநர்கள் வரை அனைவருக்குமான கட்டுரைகளை வழங்குவதே டெய்லிஹன்டின் நோக்கமாகும்.
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து துல்லியமான கவரேஜை டெய்லிஹன்டில் பெறலாம். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதே மின்னல் வேகத்தில் வழங்கப்படும். அனைவரும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் டேபிள் மூலமும் விளக்கப்படும்.
ஒரு அரசியல் கட்சி இந்த தேர்தலில் பெற்ற இடங்கள், கடந்த தேர்தலில் பெற்ற இடங்கள். டிரெண்ட் என்ன ஆகியவை குறித்து எளிய விளக்கங்கள் இடம் பெறும். மாநில வாரியாக, தொகுதி வாரியாக எங்கே டிரெண்ட் மாறியுள்ளது என்பது எளிமையாக விளக்கப்படும்.
தேர்தல் முடிவுகளால் சமூக வலைத்தளங்களில் இருக்கும் ரியாக்ஷன், ட்விட்டர் டிரெண்டிங், மீம்கள், வீடியோக்கள் என 5 மாநில தேர்தல் குறித்து விரிவான கவரேஜை டெய்லிஹன்டில் பெறலாம்.
விரிவான தேர்தல் கவரேஜை தர புதிய முயற்சியாக டெய்லி ஹன்ட்டில் எலெக்ஷன் ஜோன் என்ற புதிய பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளைத் தாண்டி, கட்சி ரீதியான தகவல், வேட்பாளர் பட்டியல்கள், ரியல் டைம் சுவாரசிய தகவல்கள், விரிவான வேட்பாளர் விவரங்கள், களத்தில் ஏற்படும் மாற்றங்கள் என விரிவான தகவல்கள் ஹெய்லி ஹன்ட்டில் இருக்கும். தேர்தல் சார்ந்த வீடியோக்கள், லைவ் அப்டேட்கள் என்று ஒரு மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும். தேர்தல் குறித்த அனைத்து செய்திகளையும் உங்களால் ஒரே இடத்தில் பெற முடியும்.












Click it and Unblock the Notifications