"செய்தியாளர்களுக்கு அனுமதி தாங்க.." பல முறை கோரிக்கை விடுத்த அமெரிக்கா.. அப்படியே நிராகரித்த இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் பைடன் இடையே சந்திப்பு நடந்த நிலையில், அது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்றும் நாளையும் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உலகின் பவுர்புல் நாடுகள் அனைத்தும் உறுப்பினராக இருக்கும் இந்த மாநாடு சர்வதேச அளவில் முக்கியமானது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

 At Biden-Modi bilateral meet India turned down US requests for more press access

இதில் கலந்து கொள்ள அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் உலக தலைவர்கள் டெல்லிக்கு வந்தனர். இதன் காரணமாக டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு, அணுஆயுதம், வளரும் ஏஐ துறை எனப் பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்தக் கூட்டம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைடன்: அதாவது பைடனுடன் வந்த செய்தியாளர்களுக்கு இந்த மீட்டிங்கில் கூடுதல் அணுகல் வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு பல முறை மோடி அரசுக்குக் கோரிக்கை விடுத்ததாகவும் இருப்பினும், இதற்கு இந்தியா மறுத்துவிட்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டெல்லியில் நடக்கும் நிகழ்வுகளில் ஊடகங்கள் சிறந்த அணுகலைப் பெற வெள்ளை மாளிகை தன்னால் முடிந்ததைச் செய்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் மோடி- பைடன் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. பொதுவாக இதுபோன்ற சந்திப்பிற்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். ஆனால், இந்த முறை அதுபோன்ற செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. மாறாக இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை மட்டுமே வெளியிட்டன.

அதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமாக உறுப்பினராக முயலும் நிலையில் அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று பைடன் மோடியிடம் உறுதியளித்ததாக கூறப்பட்டிருந்தது.

உச்சி மாநாடு: இது குறித்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "இது வழக்கமாக ஒரு நாட்டுத் தலைவர் மற்றொரு நாட்டிற்குச் செல்லும் போது நடக்கும் சந்திப்பு இல்லை.. ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. பல தலைவர்கள் அங்கு இருந்ததால் சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

அங்கே (இந்தியாவில்) அமெரிக்க ஊடகங்களுக்குச் சரியான பத்திரிகை அணுகலை உறுதி செய்ய வெள்ளை மாளிகை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்" என்றார். அமெரிக்காவின் டாப் அதிகாரிகள் பலரும் இந்தியா அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அமெரிக்க ஊடகங்களுக்குக் கூடுதல் அணுகலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அமெரிக்க ஊடகங்களுக்கு வெறும் கூட்டறிக்கை மட்டுமே தரப்பட்டது.

வெள்ளை மாளிகை சொல்வது என்ன: முன்னதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்தார். வழக்கமாக வெள்ளை மாளிகையில் இதுபோன்ற சந்திப்பிற்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள்.

இருப்பினும், அப்போது செய்தியாளர் சந்திப்பிற்கு முதலில் இந்தியா தயக்கம் காட்டியதாகவும் அதற்குப் பதிலாகக் கூட்டு அறிக்கை வெளியிடலாம் என்ற யோசனையை முன்வைத்ததாகவும் அப்போதே அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அப்போது பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் வால் ஸ்ட்ரீட் செய்தியாளர் சப்ரினா சித்திக், இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு இந்தியாவில் பாகுபாடுகளுக்கு முற்றிலும் இடமில்லை என்ற பிரதமர் மோடி, ஜனநாயகம் என்று நாம் பேசும்போது அதில் மனித உரிமைகளுக்கு இடம் இல்லை என்றால் அது ஜனநாயகமே இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+