சூப்பர்ல.. அடல் பென்ஷன் யோஜனா..மாதம் ரூ.5000 யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா? மத்திய அரசு அதிரடி
டெல்லி: ஓய்வூதியதாரர்களுக்கு, மாதந்தோறும் ரூ.5000 வரை வருமானம் பெரும்படியாக திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.. இந்திய அரசு குறைந்தபட்ச பென்ஷன் தொகைக்கான உத்தரவாதத்தையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது.. அது என்ன திட்டம் தெரியுமா?
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.. அதில் ஒன்றுதான் சிறு சேமிப்பு திட்டங்களாகும். இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்கக்கூடியதுமாகும்..
சேமிப்புகள்: தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன. அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
யோஜனா பென்ஷன் திட்டம்: அதேபோல, விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. நிதி பரிவர்த்தனைகளில் இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது... அரசாங்கம் நேரடியாக ஒரு பெறுநரின் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றுகிறது. அதேபோல ஓய்வூதியதாரர்களுக்கும் மத்திய அரசு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது.. அதன்பெயர்தான், அடல் ஓய்வூதிய திட்டம்.
வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானம் தரக்கூடியது.. கடந்த மே 2015ம் ஆண்டு பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.. அதாவது, 2015-16 பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் ஓய்வூதிய திட்டமானது வயதானவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு திட்டமாகும்.
மேம்பாட்டு ஆணையம்: தேசிய ஓய்வூதிய அமைப்பு மூலமாக ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வூதியத் தொகையாக மாதந்தோறும் சந்தாதாரருக்கு ரூ. 1,000 முதல் 5,000 வரைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும்.

அதுமட்டுமல்ல, ஏதேனும் காரணத்தினால் சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் தொகை வழங்கப்படும்... ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்..
மோசமான நோய்: சந்தாதாரர் 60 வயது பூர்த்தியடையும்போது மட்டுமே இந்த அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான 100 சதவீதம் பென்ஷன் தொகையையும் இந்த சந்தாதாரர் பெற முடியும்... 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. ஆனாலும், சந்தாதாரர் இறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டு இருத்தல் போன்ற அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே இது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications