Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு! பரபரக்கும் ஆந்திர அரசியல் களம்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. ஜெகன் அரசு 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.

Jagan Mohan Reddy Andhra Pradesh


கொலை முயற்சி:
இதற்கிடையே இப்போது ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து மேலும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இப்போது ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஐபிஎஸ் அதிகாரிகள் பிவி சுனில் குமார் மற்றும் பிஎஸ்ஆர் சீதாராமஞ்சநேயுலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆர் விஜய் பால் மற்றும் குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் ஜி பிரபாவத் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏன் பழைய சட்டம்: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1ம் தேதி புதிய சட்டங்களுக்கு அமலுக்கு வந்தாலும் கூட, எம்எல்ஏ ராஜு புகார் அளித்த சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. இதன் காரணமாகவே அப்போது நடைமுறையில் இருந்த ஐபிசி கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ன நடந்தது:
கொரோனா பரவல் அலை அலையாக நம்மைத் தாக்கிக் கொண்டு இருந்த காலத்தில் 2021இல் ராஜு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் ஜெகனின் ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸில் தான் இருந்தார். இருந்தாலும் அவர் ஜெகன் அரசைத் தொடர்ந்து விமர்சித்தே வந்தார். அப்போது தான் மத நல்லிணக்கத்தைக் குலைத்ததாகச் சொல்லிக் கடந்த 2021இல் ஆந்திரப் பிரதேச சிஐடி போலீசார் ராஜுவை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர். இது தொடர்பாகவே ராஜு இப்போது புகாரளித்துள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் திடீரென இடிப்பு! கொதிக்கும் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது?


பரபர புகார்: தான் கைது செய்யப்பட்ட போது விதிகளின்படி உள்ளூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும், சிஐடியிடம் ட்ரான்சிட் கைது வாரண்ட் இல்லை என்றும் இதனால் கட்டாயப்படுத்தி குண்டூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், "2021 மே 14ம் தேதி முறையான விதிகள் பின்பற்றப்படாமல் நான் கைது செய்யப்பட்டேன்.. நான் கொடுமைப்படுத்தப்பட்டேன்.. சட்டவிரோதமாக போலீஸ் வாகனத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டேன்.. அதே இரவில் வலுக்கட்டாயமாக குண்டூருக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

கொலை முயற்சி: பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு உள்ளிட்ட அதிகாரிகள் பெல்ட்கள் மற்றும் தடிகளால் தாக்கினர். இதய நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. எனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது என்பது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், மருந்து எடுக்க அனுமதிக்கவில்லை. சில அதிகாரிகள் வேண்டுமென்றே மார்பில் அமர்ந்து கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். எனது மொபைலை பிடுங்கிக் கொண்டனர். அதன் பாஸ்வோர்டை சொல்லும் வரை தாக்கினர்" என்று கூறியுள்ளார்.

மேலும், அதன் பிறகு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு மருத்துவர் பிரபாவதி மோசமாகச் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் தூண்டுதலின் பேரில் போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்தால் உயிரை இழக்க நேரிடும் என்றும் பிவி சுனில் குமார் மிரட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+