ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் திடீரென இடிப்பு! கொதிக்கும் தொண்டர்கள்.. என்ன நடக்கிறது?
ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினார். இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்தது. இந்தத் தேர்தலில் வெறும் 11 இடங்களில் மட்டுமே அவர்களால் வெல்ல முடிந்தது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது மட்டுமின்றி 11 சீட்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. இதற்கிடையே இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது.
இடிப்பு: ஆந்திரா முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான இல்லம் ஒன்று தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள லோடஸ் பாண்ட் பகுதியில் அமைந்துள்ளது. அவரது வீட்டின் முன்புறம் ஒரு பகுதி நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதாவது ஜெகனின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கம் அறை நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்பதே புகாராகும்.
இந்தச் சூழலில் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அந்த சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அகற்றினர். பாதுகாப்பு அதிகாரிகள் தங்கும் அந்த அறை சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகவும் இது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அப்பகுதி மக்கள் இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
என்ன காரணம்: பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு அறை இடிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அப்பகுதி மக்களால் நடைபாதையை ஈஸியாக பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. போலீஸ் துணையுடன் அங்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்பை இடித்துள்ளனர். அப்போது ஜெகன் கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை அரசியல் பழிவாங்கல் என்றும் சந்திரபாபு நாயுடு தந்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையை ஹைதராபாத் அதிகாரிகள் எடுத்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications