Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாவ் சூப்பர்! "இதுதான் ரியல் இந்தியா.." உண்மையை உடைத்த ஆஸ்திரேலிய சுற்றுலா பயணி.. குவியும் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவைச் சுற்றிப் பார்க்கப் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தாலும் கூட பலரும் நமது நாட்டை பற்றி மோசமான தகவல்களையே பரப்புகிறார்கள். ஆனால், உண்மையான இந்தியா அப்படி இல்லை என்ற உண்மையை அழுத்தம் திருத்தமாகப் பதிவிட்டுள்ளார் ஆஸ்திரேலியச் சுற்றுலாப் பயணி ஒருவர்.! அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

கடந்த சில ஆண்டுகளாகவே உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் எனப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு வருகிறார்கள். இருப்பினும், இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டை பற்றி மோசமான தகவல்களையே பரப்புகிறார்கள்.

Australia Traveler Exposes Dirty India Reels for Likes Praises Rishikesh s Spotless Streets

சிக்கல்

எல்லா நாடுகளைப் போலவே இந்தியாவிலும் சில சிக்கல்கள் இருப்பது உண்மை தான். ஆனால், வியூஸ் மற்றும் லைக்ஸுக்காக நல்ல விஷயங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு மோசமான விஷயங்களை மட்டும் ஹைலைட் செய்கிறார்கள். அதுவே பிரதானப் பிரச்சினையாக இருக்கிறது.

அதேநேரம் வெகு சில வெளிநாட்டுப் பயணிகள், இந்தியாவில் இருக்கும் அழகியல் மற்றும் நல்ல விஷயங்களையும் பகிரவே செய்கிறார்கள். அப்படி இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா பெண், பகிர்ந்துள்ள ஒரு வீடியோ தான் இப்போது டிரெண்டாகி வருகிறது. காலை நேரம் இந்தியத் தெருக்களைச் சுத்தம் செய்ய நடக்கும் பணிகளை விளக்கி அவர் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதுவே இப்போது டிரெண்டாகியுள்ளது.

ஆஸ்திரேலியச் சுற்றுலாப் பயணி

ரிஷிகேஷில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் தூய்மைப் பணியாளர்கள் தெருவைச் சுத்தம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.. ஒரு பக்கம் தூய்மைப் பணியாளர் ஒருவர் சாலையோரம் கால்வாயைச் சுத்தம் செய்கிறார். அருகில் அவரது சிறிய வண்டியும் நின்றிருந்தது. இன்னொரு பக்கம் துடப்பத்தை வைத்து அங்குள்ள குப்பைகளை இன்னொருவர் அகற்றுகிறார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அந்தப் பயணி, "இந்தியா எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்றுதான் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வீடியோவை பதிவிடுவார்கள். ஆனால், அதிகாலையில் ஒவ்வொரு நாளும் தெருக்களைச் சுத்தம் செய்ய நடக்கும் பணிகளை அவர்கள் காட்ட மாட்டார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தவறான தகவல்கள்

லைக்ஸ் மற்றும் வியூஸுக்காக பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் இந்தியா பற்றி தவறான தகவல்களே பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும், "இந்தியாவிற்கு வரும் பல சுற்றுலாப் பயணிகள் அதன் மோசமான பக்கத்தைக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதிர்ச்சியை உருவாக்கவும், பாலோயர்ஸ்களை அதிகரிக்கவும் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

குப்பை சேகரிப்பு மற்றும் அதை முறையாக அகற்றுவதில் இந்தியாவில் பிரச்சினைகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், வெறும் வியூஸ்களுக்காக ஒரு நாட்டையே தொடர்ந்து குறை சொல்லத் தேவையில்லை. இந்தியா நிஜமாகவே ஒரு மிகப் பெரிய நாடு.. இது வேறுபட்ட மாநிலங்களை உள்ளடக்கியது. இந்தியாவின் எல்லா இடங்களும் ஒரே மாதிரியாக இருக்காது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ ரிஷிகேஷ் பகுதியில் படமாக்கப்பட்டதாகவும் அந்த நகரம் சுத்தமாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வீடியோவை பலரும் வரவேற்றுள்ளனர்.

நெட்டிசன்கள்

அவரது இந்த போஸ்ட்டை நெட்டிசன்கள் பலர் பாராட்டினர். நெட்டிசன் ஒருவர், "நீங்கள் பாசிட்டிவாக எந்தவொரு விஷயத்தையும் பார்க்கிறீர்கள்.. அது எனக்குப் பிடித்துள்ளது. இந்தியா ஒரு சிக்கலான நாடு. இங்கு நல்ல விஷயங்களும் உள்ளன.. சில சிக்கலான விஷயங்களும் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நபர், "ஆம், இவர் சொல்வது உண்மை.. எல்லா நாடுகளிலும் சிக்கல் உள்ளன. ஆனால், இந்தியாவின் சிக்கல் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது" என பதிவிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+