"ஏர்போர்ட்.." எப்படி நடந்து கொள்ளனும் தெரியுமா.. பாஜக எம்பிக்களுக்கு கிளாஸ் எடுத்த பிரதமர் மோடி
பாஜக எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்
டெல்லி: "பொதுமக்களை நேரில் சென்று சந்திப்பதை விட சிறந்தது எதுவுமில்லை, நீங்கள் வெற்றி பெற நான் இருக்கிறேன், ஆனால், நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி பாஜக எம்பிக்களை கேட்டுக் கொண்டார்.
இன்னும் சில மாதங்களில் எம்பி தேர்தல் வர உள்ளது.. இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன..
குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள அக்கட்சி தீவிர நடவடிக்கையில் இறங்கி வருகிறது. இதற்காகவே, பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்..

பாஜக
வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் போதெல்லாம் பாஜக எம்பிக்களுடன் காலை சிற்றுண்டியை ஒட்டிய சந்திப்புகளை பிரதமர் நடத்துவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பாஜக எம்பிக்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. கடந்த வாரம் மத்தியப் பிரதேச மாநில பாஜக எம்பிக்களுடன் அவர் சந்திப்பு நிகழ்த்தினார்.. அதேபோல, காசி விசுவநாதர் கோயிலில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, வாரணாசியில் பாஜக ஆளும் 12 மாநிலங்களில் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வேண்டுகோள்
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த பாஜக உறுப்பினர்களுடனும் மோடி உரையாற்றினார்.. அப்போது சில வேண்டுகோள்களையும் அறிவுரைகளையும் மோடி பாஜக எம்பிக்களிடம் முன்வைத்து வருகிறார்.. அதன்படி, தங்கள் தொகுதிகளில் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்தவும், பொதுமக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் அவர்களை கேட்டுக் கொண்டார்...

எம்பிக்கள்
எம்பிக்கள் விமான நிலைய ஓய்வறையை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வரிசையில் நின்று மக்களோடு மக்களாக நின்று ஒரு சாமானியனை போல நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வரப்போகும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தான் இருப்பதாக உறுதியளித்த பிரதமர், தங்கள் பகுதிகளில் சுறுசுறுப்பாக இயங்கும்படியும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..

திறமைகள்
எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு வருமாறு பிரதமர் அப்போது மேலும் கேட்டுக் கொண்டார்... அதுமட்டுமல்ல, பொதுமக்களை நேரில் சென்று சந்திப்பதை விட சிறந்தது எதுவுமில்லை, நீங்கள் வெற்றி பெற நான் இருக்கிறேன், ஆனால் நீங்களும் உங்கள் பங்கை செய்ய வேண்டும்.. மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும்... மக்களுடன் அதிகமான சந்திப்புகளை ஏற்பாடு செய்து, அவர்கள் அரசாங்கத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்...

வாய்ப்புகள்
அரசாங்கம் செய்த பணிகளை முன்வைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து செயல்படுவது முக்கியம்.. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தில் இடம்பெறும் கலந்துரையாடல் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்வது முக்கியம் என்றார் பிரதமர் மோடி.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications