உயிரே போகும் ஆபத்து இருக்கு.. தப்பி தவறியும் இதை எல்லாம் தொடாதீங்க.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இளைஞர்களிடையே இன்று பல வித பாதிப்புகள் அதிகம் ஏற்படும் நிலையில், எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து முக்கிய அறிவுறுத்தல் இப்போது வெளியாகியுள்ளது.

நமது நாட்டில் ஜிம் செல்லும் பல இளைஞர்கள் protein supplementகளை எடுத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பு உரிய ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

Avoid Protein Supplements Top Medical Body gives new Advisory

இருப்பினும், நமது நாட்டில் பெரிதாக ஆலோசனை எல்லாம் பெறுவதில்லை. இஷ்டம் போலப் புரத சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிவுறுத்தல்: அதாவது புரத சப்ளிமென்ட்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் அல்ட்ரா பிராசஸ்ட் உணவுகளையும் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், எந்தவொரு உணவை எடுத்துக் கொள்ளும் முன்பு அதில் உள்ள தகவல்களைத் தெளிவாகப் படிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்களின் அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கும் திருத்தப்பட்ட 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்களை' தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் எனப் பல துறை நிபுணர்கள் இணைந்து இதை உருவாக்கி உள்ளனர். இதில் மொத்தம் 17 வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு பிரச்சினைகள்: அதிக அளவு protein supplementகளை நீண்ட காலம் உட்கொள்வது நீண்ட கால நோக்கில் எலும்பு பிரச்சினைகளை ஏற்படுத்துமாம்.. மேலும், அவை உடலில் மினரல் இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எனர்ஜிக்காக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சர்க்கரையானது 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகை உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடாமல் மிக்ஸ்ட் டயர்ட்டை பாலோ செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவு தானியங்கள் மற்றும் தினைகளை 45 சதவீதமும் பருப்பு வகைகள் மற்றும் இறைச்சியை 15 சதவீதமும் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கலோரி தேவைகளுக்கு நட்ஸ், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

குறைபாடு: நமது நாட்டில் பருப்பு மற்றும் இறைச்சி விலை அதிகம் என்பதால் பெரும்பாலான இந்தியர்கள் அரிசி, கோதுமையை மட்டுமே அதிகம் சாப்பிடுகிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ் (அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள்) மற்றும் மெக்ரோ நியூட்ரியண்ட்ஸ் போதியளவில் கிடைப்பதில்லையாம்.

இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் குறைவாக உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும். மேலும், இவை இளம் வயதிலிருந்தே இன்சுலின் எதிர்ப்பு தொடர்புடைய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவுகள்: இந்தியாவில் ஏற்படும் மொத்த நோய்ப் பாதிப்புகளில் சுமார் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவு முறைகளாலேயே ஏற்படுகிறது. இதனால் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சி முக்கியமானதாக மாறுகிறது. அப்போது தான் இதய மற்றும் ரத்த அழுத்தப் பாதிப்புகளைக் குறைக்க முடியும். மேலும் முறையான உணவு சாப்பிட்டாலே டைப் 2 நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் இளமைக் கால மரணங்களையும் பெருமளவு குறைக்கலாம். சர்க்கரைகள் மற்றும் கொழுப்பு அதிகம் நிறைந்த அல்டிரா பிராசஸ்ட் உணவுகளைச் சாப்பிடுவதும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகள் மற்றும் உடல் பருமன் எனப் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+