அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் யார்? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு.. பலத்த எதிர்பார்ப்பு
Recommended Video

டெல்லி: அயோத்தி, ராம ஜென்ம பூமி நில விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இதில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள மத்தியஸ்தர்கள் பெயரை வழக்கில் தொடர்புள்ள அமைப்புகள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டது. இதில், நிர்மோகி அகாரா அமைப்பை தவிர்த்த பிற இந்து அமைப்புகள் சமரசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், முஸ்லீம் அமைப்புகள் சமரசத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நிர்மோகி அகாரா அமைப்பு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஏ.கே.பட்நாயக் மற்றும் ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் பெயர்களை மத்தியஸ்தர்களாக பரிந்துரைத்தது. ஹிந்து மகாசபா பிரிவை சேர்ந்த சுவாமி சக்ரபாணி, உச்சநீதிமன்ற, முன்னாள் தலைமை நீதிபதிகளான ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் ஆகியோர் பெயர்களை பரிந்துரைத்தது.
இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் தொடர்பான உத்தரவை நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது. இதனால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications