Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரபரப்பு கட்டத்தில் பாபர் மசூதி வழக்கு.. ஜூலை 24ல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கிறார் அத்வானி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான, எல்.கே.அத்வானி, 24ம் தேதி, சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில், வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இதன் பின்னணியில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த பாஜக தலைவர்கள் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

Babri mosque demolition case: Advani to depose on July 24; MM Joshi on July 23

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, ஆகஸ்ட் 31க்குள் முடிக்க, இந்த நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான், அத்வானியின் வாக்குமூலத்தை, வரும், 24ம் தேதி, வீடியோ கான்பரஸ் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என, சிறப்பு நீதிபதி, எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார். சிஆர்பிசி சட்டப்பிரிவு 313ன்கீழ், வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.

அதேபோல், முரளி மனோகர் ஜோஷியின் வாக்குமூலம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஜூலை 23ம் தேதி பெறப்படுகிறது.

ஜூலை 22ம் தேதி, சிவசேனா எம்.பி. சதிஷ் பிரதான், வாக்குமூலத்தை பதிவு செய்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+