Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாஷிங் மெஷின் நீரில் மூழ்கி நீல நிறமாக மாறிய குழந்தை மீட்பு.. கோமாவிலிருந்து உயிர் பிழைத்த அதிசயம்

15 நிமிடங்கள் நீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை 15 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

டெல்லியில் ஒரு வீட்டில் ஒன்றரை வயது மதிப்புள்ள குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சோப்பு தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறி விழுந்துவிட்டது.

இதையடுத்து குழந்தையை காணவில்லை என அவரது தாய் வீடு முழுவதும் தேடினார். சுமார் 15 நிமிடங்கள் ஆன நிலையில் அந்த குழந்தை வாஷிங் மெஷினில் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

உடனே அந்த குழந்தை வாஷிங் மெஷினிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. அப்போது குழந்தை சுயநினைவின்றி இருந்தது. கடும் குளிர் மற்றும் மூச்சுத்திணறலும் இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. குழந்தை 7 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கோமாவில் இருந்தது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதையடுத்து தீவிர சிகிச்சையால் வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு ஒரு 12 நாட்கள் இருந்தது. அப்போது அங்கிருந்த தனது தாயை அடையாளம் கண்டு அவரிடம் மழலையில் பேசியது. அப்போது பெற்றோருக்கு உயிரே வந்தது. இதையடுத்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். இதை பார்த்த மருத்துவர்கள் இனி குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றனர்.

19 நாட்கள்

19 நாட்கள்

19 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தாய் அந்த அறையை விட்டு வெளியேறியதும் டாப் லோடிங் வாஷிங் மெஷினின் மூடி திறந்திருந்ததால் அதன் அருகே இருந்த டேபிளில் ஏறி மெஷினில் தவறி விழுந்திருக்கலாம் என தெரிகிறது.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது சுயநினைவின்றி இருந்தது, கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலையும் கூறவில்லை. பின்னர் அதன் உடல் நீலமாக மாறிவிட்டது. குழந்தையின் இதயத் துடிப்பு பலவீனமாக இருந்தது. நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் இல்லை.

15 நிமிடங்கள்

15 நிமிடங்கள்

குழந்தை அந்த சோப்பு தண்ணீரில் 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்தது. எனினும் இந்த சூழலில் குழந்தை உயிர் பிழைத்தது அதிசயம்தான். 15 நிமிடங்களுக்கு மேல் சோப்பு நீரில் குழந்தை இருந்திருந்தால் உயிரை காப்பாற்றுவது பெரும் சிரமமாகியிருக்கும். குழந்தைக்கு நிமோனியா வந்துவிட்டது. காஸ்ட்ரோ இன்டஸ்டினல் தொற்றால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூளைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குழந்தை சோப்பு தண்ணீரில் இருந்ததால் அதற்கு ஆன்டிபயாட்டிக்குகளும் நரம்பில் செலுத்தப்படும் திரவங்களும் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தனது தாயை அடையாளம் கண்டு கொண்டது. பின்னர் குழந்தைக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் நீக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமாக இருக்கிறது, வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+