ஒலிம்பிக்கில் அடித்து நொறுக்கிய இந்திய ஹாக்கி டீம்! இதுக்கு விதை போட்டதே நவீன் பட்நாயக்தான் தெரியுமா
டெல்லி: ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. 1972க்கு பிறகு இந்திய ஹாக்கி அணி தொடர்ச்சியாக இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை.. ஹாக்கி அணியின் இந்த சாதனைக்கு ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் முக்கிய காரணம் என்பது பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. 3வது இடத்திற்கான போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

2021ஐ போலவே இந்த முறையும் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றுள்ளது. 1972க்கு பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 2 ஒலிம்பிக் தொடர்களில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
நவீன் பட்நாயக்: ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஹாக்கி அணி அடைந்த இந்த வெற்றிக்கு ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. இந்திய ஹாக்கி அணி மோசமான காலகட்டத்தில் இருந்த போது யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அப்போதும் நவீன் பட்நாயக் தான் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்துள்ளார்.
அவர் பதவி விலகும் வரையிலும் இந்திய ஹாக்கி அணிக்கு அவர் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளிலும் உதவி வந்துள்ளார். 2018 முதல், ஒடிசா அரசு தான் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சராக இருந்து வருகிறது. 2018இல் சஹாரா ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய நிலையில், ஒடிசா அரசு ஸ்பான்சர் தர முன்வந்தது. அதன் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 120 கோடி நிதியுதவி அளித்தது.
ஒடிசா அரசு: இந்த நிதி உள்கட்டமைப்பை டெவலப் செய்யவும் அணியின் செலவுகளைப் பார்த்துக் கொள்ளவும் உதவியது. இது தவிர, இரு அணிகளுக்கும் தேவையான போர்டிங், பயிற்சி, கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துவது என்று அனைத்து செலவுகளையும் ஒடிசா அரசே பார்த்துக் கொண்டது. இதற்காகவே ஒடிசா அரசு கணிசமான நிதியை ஒதுக்கியது.
ஒரு தேசிய அணியை ஒரு மாநில அரசு வளர்த்தெடுத்தது இதுவே முதல்முறை. ஹாக்கி அணியை வளர்த்தெடுக்க நவீன் பட்நாயக் தன்னால் முடிந்த அனைத்தையுமே செய்தார். ஒடிசா தலைநகர் புபனேஷ்வரில் உலகத் தரத்தில் கலிங்கா ஸ்டேடியத்தை அமைத்தார். கடந்த 6 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்த பல சர்வதேச ஹாக்கி தொடர்கள் இந்த கலிங்கா ஸ்டேடியத்திலேயே நடந்தது. இப்படி அவர் ஏகப்பட்ட உதவிகளைச் செய்தார். அதற்கான பலனே இப்போது கிடைத்துள்ளது.
வெற்றிகள்: 2018இல் ஒடிசா அரசு உள்ளே வந்து வந்த பிறகே பல நல்ல விஷயங்கள் நடந்தன. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் தொடருக்குத் தேர்வாகக் கூட முடியாத நிலையில், இருந்த இந்திய ஹாக்கி அணி 2021இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்றது. ஒலிம்பிக் தொடரில் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வெல்வது 41 ஆண்டுகளில் அதுவே முதல்முறை.
அதன் பிறகு ஆண்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2021, புரோ லீக் 2021-22 மற்றும் ஆசியக் கோப்பை 2022 உள்ளிட்ட தொடர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 2022ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹாக்கி அணி, 2023இல் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய விளையாட்டு கோப்பையை வென்றனர்.
விதை போட்டவர்: நவீன் பட்நாயக் கல்லூரி காலத்தில் ஒரு ஹாக்கி வீரர்.. அவர் அப்போது கோல் கீப்பராக இருந்தவராம். அதனால் தான் என்னவோ ஹாக்கி டீமை பார்த்துப் பார்த்து வளர்த்துள்ளார். அதேநேரம் மத்திய அரசு செய்ய வேண்டிய வேலையை ஏன் ஒரு மாநில அரசு செய்கிறது என்று நவீன் பட்நாயக்கிடம் செய்தியாளர்கள் ஒரு முறை கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "நாட்டிற்குச் சங்கடம் ஏற்படாமல் இருக்க யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.. இப்போது அதை நான் செய்கிறேன்" என்று கூலாக பதிலளித்தார்.
ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரு பதக்கங்கள் வென்ற பிறகு ஹாக்கி அணி குறித்து பலரும் பேசலாம். ஆனால், இதற்கெல்லாம் விதை போட்டது என்னவோ நவீன் பட்நாயக் என்பதே மறுக்க முடியாது உண்மை.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications