என்டிஏ, ‛இந்தியா’ கூட்டணிக்கு ஷாக் தந்த மாயாவதி! லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது பாஜகவின் என்டிஏ தலைமையிலான கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கவும், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யவும் பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக பாஜக என்டிஏ கூட்டணியை அமைத்துள்ளது.

தற்போது இந்த கூட்டணியில் 20க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. ஆனால் தற்போது பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துள்ளது.
மாறாக பாஜகவை இந்த தேர்தலில் வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 26 கட்சிகள் உள்ளன. இந்நிலையில் தான் சில கட்சிகள் பிரதமர் மோடியின் என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெறவில்லை.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் தெலங்கானா முதல்வர் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சில கட்சிகள் என்டிஏ மற்றும் ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய விஷயத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலமுனை போட்டி நிலவும். பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஜேபிக்கு எதிரான எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். வேலைவாய்ப்பின்மை, வறுமை, புலம்பெயர்வது உள்ளிட்டவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தான் விளிம்பு நிலை மற்றும் பின்தங்கிய மக்களுக்கான நம்பிக்கையாக உள்ளது. வரும் காலத்தில் மக்கள் நல்ல முடிவை வழங்குவார்கள்'' என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications