பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி, தலைநகர் பக்கத்திலேயே குண்டு வீசிய இந்தியா.. தரமான சம்பவம் இதுதான்
Recommended Video

டெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள பாலகோட் பகுதி வரை சென்று இந்திய விமான படை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
புல்வாமா பகுதியில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேர் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலை படையால், கடந்த 14ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான் இந்திய விமானப்படை பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் உள்ளே
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இருந்தால்கூட பரவாயில்லை.. இந்திய விமானப்படையோ, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை வீரத்தோடு நடத்தியுள்ளது. 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானின், சர்வதேச எல்லைக்குள் நுழைந்து, இந்திய ராணுவம் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

பாகிஸ்தான் தலைநகர்
அதுமட்டுமா, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வெறும் 190 கிலோ மீட்டர் தூரத்தில் தான் பாலகோட் பகுதி உள்ளது. இந்த பகுதியில்தான் தொடர்ச்சியாக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ. இந்திய உளவு அமைப்புகள் இந்த தகவலை திரட்டி இலக்கை நிர்ணயித்ததும், இந்திய விமானப்படை துல்லிய தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

எங்கே உள்ளது பாலகோட்
சர்வதேச எல்லைக் கோட்டில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் உள்ளே, பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ளது பாலகோட் பகுதி. ஜம்மு காஷ்மீரின் யூரி எல்லைப் பகுதியிலிருந்து 81 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

எதிர்பார்க்காத பாகிஸ்தான்
இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்திருந்தது. தீவிரவாதிகளும் எதிர்பார்த்திருந்தனர். எனவே எல்லைக்கோடு அருகே இருந்த தீவிரவாத முகாம்களை காலி செய்து உள்ளே சென்றனர். ஆனால், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ராணுவத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு, இஸ்லாமாபாத் அருகே வரை வந்து தீவிரவாத முகாம்களை அழிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவேதான் இந்த வெற்றிகரமான தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

தரமான சம்பவம் இதுதான்
இந்த தாக்குதலில் யாருமே கொல்லப்படவில்லை என்று பாகிஸ்தான் கூறினாலும் கூட, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை உறுதி செய்துள்ளது. தங்கள் தலைநகர் அருகே வரை, இந்திய விமானப்படை வந்து திரும்பியதை பாகிஸ்தானும் மறுக்கவில்லை. இதன்மூலம் பாகிஸ்தானின் ரேடார் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள், இந்திய விமானப்படையினரின், திறமைக்கு முன்பாக ஒன்றுமே இல்லை என்பது, உலகத்திற்கு நிரூபணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications