நீட் விலக்கே நிரந்தர தீர்வு.. மாநிலங்களவையில் உறுதியாக சொன்ன திருச்சி சிவா! பாஜக எம்பிக்கள் அமளி!
டெல்லி: வினாத்தாள் கசிவு குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் மசோதாவை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது மட்டுமே நிரந்தர தீர்வு என்று மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா பேசியிருக்கிறார். அவரை பேச விடாமல் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர்.
அவர் பேசியதாவது, "நீட் விவகாரத்தில் ஏராளமான மாணவர்கள் உயிரை மாய்துக்கொண்டிருக்கிருக்கின்றனர். இந்த விஷயத்தில் அரசு நிரவாரணத்தை அறிவிக்கலாம்.. ஆனால் போன உயிர்களை மீண்டும் கொண்டுவர முடியாது. கடந்த வாரம் அவை நடக்கவில்லை. எனவே இன்று அவையில் மற்ற பிரச்சனைகள் குறித்து பேசுவதை ஒத்தி வைத்துவிட்டு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்" என்று பேசினார்.
ஆனால், அவரை பேசவிடாமல் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர். உடனே அவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கேரள சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸுக்கு பேச வாய்ப்பு அளித்தார். அவரும் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து பேசினார். உடனே அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

நீட் போராட்டம்
என்னதான் டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்திருந்தாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை.. இடதுசாரி மாணவர் அமைப்புகள்தான் போராட்டத்தை தீவிரமாக கொண்டு சென்றிருந்தன. இதற்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்தது. தமிழ்நாடு மாணவர்களின் போராட்டத்தை நாடே திரும்பி பார்த்திருந்தது. இப்படி இருக்கையில், வெறுமென தேர்வை ஒழுங்குப்படுத்துவது மட்டுமே தீர்வாகாதாது.. தேர்வை முழுமையாக ரத்து செய்வதுதான் தீர்வு என்று திமுக கூறிவருகிறது.
இதே நிலைப்பாட்டைதான் மாநிலங்களவையில், திருச்சி சிவா எதிரொலித்துள்ளார். ஆனால், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிகள் இதை முழுவதுமாக எதிர்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
