இத கடைசியா பார்த்துக்கோங்க! ஸ்ட்ரா, பட்ஸ் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை
டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ராக்கள், ஸ்பூன்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என கடந்த மாதம் அறிவித்தது.
இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், கடை உரிமையாளர்கள், தெருக்கடையோர வியாபாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தடையை மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 100 மைக்ரானுக்கு குறைவான பிவிசி பேனர்கள், ஐஸ்கிரீம் குச்சிகள், குச்சி மிட்டாய் குச்சிகள், காது குடையும் குச்சிகள், கப்புகள், கொடிகள், வடிவமைப்பு தெர்மாக்கோல்கள் போன்றவை தடை செய்யப்படும்.
குறிப்பாக அட்டையில் வரும் 10 ரூபாய் குளிர்பானங்களில் இடம்பெற்று இருக்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் போன்றவற்றை தடை செய்யப்போவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து இருக்கிறது. இந்த தடை அமலுக்கு வருவதற்கு இன்னும் 17 நாட்களே மீதம் இருப்பதால் அதற்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருக்கிறது.
இந்த கட்டுப்பாடு காரணமாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் குளிர்பான நிறுவனங்களின் விலை உயர்த்தப்படலாம் என்றும், அல்லது அந்த குளிர்பானங்கள் விற்பனை நிறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications