சிறந்த இந்திய நகர லிஸ்ட்! கடைசி இடத்தில் பெங்களூர்! உள்கட்டமைப்பில் படுமோசம்! சென்னைக்கு எந்த இடம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டிற்கான உலகில் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் இந்திய நகரங்களில் பெங்களூர் தான் கடைசி இடத்தை பிடித்து உள்ளது.

பொருளாதார புலனாய்வு அமைப்பு எனப்படும் The Economist Intelligence Unit ஆண்டுதோறும் உலகெங்கும் உள்ள வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலை வெளியிடும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த நகருக்கான பட்டியலை இந்த அமைப்பு கடந்த வாரம் வெளியிட்டது. உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வாழக் கூடிய தரத்தின் அடிப்படையில் தரவரிசையில் இடம்பெறும்.

பெங்களூர்

பெங்களூர்

கடந்த ஆண்டில் ஒரு ஆய்வில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையமாகப் பெங்களூர் இருந்தது. ஆனால், உலகில் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் பெங்களூர் தான் கடைசி இடத்தில் உள்ளது. மொத்தம் 173 நகரங்களில் வாழ்க்கை நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்தது பொருளாதார புலனாய்வு அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பட்டியல்

பட்டியல்

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் இந்தியாவில் இருந்து இடம் பெற்று உள்ளது. அனைத்து இந்தியா நகரங்களும் 140-146 இடங்களைப் பிடித்துள்ளது. இந்திய நகரங்களில், 56.5 வாழ்வாதார மதிப்பெண்ணுடன் டெல்லி 140ஆவது இடத்தைப் பெற்றது. அதைத்தொடர்ந்து மும்பை 141 (56.2), சென்னை 142 (55.8), அகமதாபாத் 143 (55.7), பெங்களூரு 146 (54.4) இடங்களைப் பெற்றுள்ளது.

 எதன் அடிப்படையில்

எதன் அடிப்படையில்

ஸ்திரத்தன்மை, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குறியீட்டில் சென்னை, பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை இடம் பெற்று உள்ளது இதுவே முதல் முறை. ஸ்திரத்தன்மை, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் கல்வி ஆகியவற்றில் பெங்களூர் மற்ற இந்திய நகரங்களுக்கு ஈடாகவே உள்ளது.

மோசம்

மோசம்

அதேநேரம் நகரின் உள்கட்டமைப்பில் அது மிக மோசமான இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பில் பெங்களூர் 46.4 (100 இல்) மதிப்பெண்களை மட்டுமே பெற்றது. டெல்லி அதிகபட்சமாக 62.5 மதிப்பெண் பெற்ற நிலையில், மும்பை 55.4 மதிப்பெண்ணும் சென்னை மற்றும் அகமதாபாத் இரண்டும் தலா 50 மதிப்பெண் பெற்றன. வாழ்வதற்கு மோசமான நகரங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள கராச்சி கூட பெங்களூரை விட உட்கட்டமைப்பில் சிறப்பாக உள்ளது. கராச்சி உள்கட்டமைப்பில் 51.8 மார்க்கை பெற்றுள்ளது. ஒப்பீட்டுக்குச் சொல்ல வேண்டும் என்றால் நைஜீரியாவின் லாகோஸ் நகரம் பெங்களூரைப் போல 46.4 மார்க்கை பெற்றுள்ளது.

 மற்ற குறியீடுகள்

மற்ற குறியீடுகள்

சிறிய குற்றங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல், ராணுவ மோதல் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றின் மூலம் அளவிடப்பட்ட ஸ்திரத்தன்மை மதிப்பிடப்படுகிறது. அதில் அகமதாபாத் (65) மார்க் பெற்றுள்ளது. பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை தலா 60 மார்க்கும், குறைந்தபட்சமாக டெல்லி 50 மார்க்கும் எடுத்தன. வானிலை முதல் ஊழல், சமூக மற்றும் மத கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை கொண்ட 'கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல்' அகமதாபாத் குறைந்தபட்சமாக 44.4 பெற்றுள்ளது. மும்பை (50.7), டெல்லி (48.6), பெங்களூர் (47.2), சென்னை (46.5) மார்க் எடுத்துள்ளது.

 மருத்துவம் கல்வி

மருத்துவம் கல்வி

மருத்துவப் பாதுகாப்பு அளவுகோலில் சென்னை, டெல்லி மற்றும் பெங்களூர் தலா 58.3 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. மும்பை மற்றும் அகமதாபாத் தலா 54.2 மதிப்பெண் பெற்றன. கல்வியில் டெல்லி, சென்னை மற்றும் பெங்களூரு தலா 75 மதிப்பெண்களைப் பெற்றன. மும்பை மற்றும் அகமதாபாத் இரண்டும் 66.7 மதிப்பெண்களைப் பெற்றன.

இல்லை

இல்லை

சிறந்த வாழக் கூடிய நகரங்களாக இருக்க வேண்டும் என்றால் இந்தப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு இந்திய நகரமும் முதல் 100 இடங்களுக்குள் இல்லை. மேலும், இந்த பட்டியலில் இருக்கும் 173 நகரங்களிலும் கூடுதல் செலவுகளைக் கணக்கிட்டுக் குறைந்தது 15% கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+