வங்கி ஸ்டிரைக்.. மொத்தமாக முடங்கும் யுபிஐ சேவை? Gpay, Phonepe பண்ண முடியாது? முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் வங்கிகள் அனைத்தும் மூடியிருக்கும் சூழலில் எந்த சேவைகள் முழுமையாக முடங்கும்.. எந்த சேவைகள் வழக்கம் போல கிடைக்கும் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம். குறிப்பாக வங்கிகளில் யுபிஐ சேவை தொடர்ந்து கிடைக்குமா என்பது தொடர்பாக பார்க்கலாம்!

நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் நாளை செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது. இதனால் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் நேரடி கிளை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட போகிறது. வங்கி ஊழியர்களின் நேரடி உதவி தேவைப்படும் பணிகள் பாதிக்கப்படலாம்.. இந்த ஸ்டிரைக் காலகட்டத்தில் எந்த சேவைகள் பாதிக்கப்படும் எனவை பாதிக்கப்படாது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

Bank Strike Bank UPI

வேலைநிறுத்தம்

வேலைநிறுத்த நாட்களில் வங்கி கிளைகள் பெரும்பாலும் மூடப்படும். சில கிளைகள் மட்டுமே குறைந்த ஊழியர்களுடன் செயல்படலாம். இதனால் வங்கி ஊழியர்களின் நேரடி உதவி தேவைப்படும் பணிகளில் சிக்கல் ஏற்படலாம். குறிப்பாக கிளையில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், கணக்கு தொடர்பான பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது. எனவே அவசரமாக கிளைக்கு செல்ல வேண்டியவர்கள் இன்றைய தினம் வங்கி செயல்படும் நிலையில், இன்றே அந்த வேலைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

தாமதம்

செக் தொடர்பான பணிகளிலும் தாமதம் ஏற்படலாம். நேரடியாக ஊழியர்களின் தலையீடு தேவைப்படும் செக் கிளியரிங் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதேபோல் டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல், கணக்கு தொடர்பான ஆவணங்களை பெறுதல் சேவைகளும் தாமதமாகலாம். ஊழியர்களின் உதவி தேவைப்படும் லாக்கர் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

யுபிஐ, ஏடிஎம் சேவைகள் இயங்குமா?

அதேநேரம் வங்கி வேலைநிறுத்தம் என்பதால் அனைத்து வங்கி சேவைகளும் முற்றிலும் முடங்கிவிடும் என்று அர்த்தமில்லை. வழக்கமான டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்போது மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் யுபிஐ சேவைகள் தொடர்ந்து இயங்கும். கூகுள்பே, போன்பே உள்ளிட்ட சேவைகளில் எந்தவொரு தடங்கலும் ஏற்படாது.

இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம் போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும். பணம் பரிமாற்றம் செய்வது, யுபிஐ மூலம் பணம் செலுத்துவது அல்லது பேலன்ஸ் பார்ப்பது போன்ற வழக்கமான பணிகளுக்கு கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் வேலைநிறுத்த காலத்தில் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

ஏன் முக்கியம்

இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் காலகட்டத்தில் மற்றொரு முக்கிய விஷயமும் உள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வங்கிகளின் அரையாண்டு நிறைவு நாளாகும். அந்த நேரத்தில் கணக்கு சரிபார்ப்பு, செட்டில்மென்ட் உள்ளிட்ட வேலைகள் நடைபெறும். இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் வங்கிகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, ஊழியர்களின் நேரடி உதவி தேவைப்படும் முக்கிய பணிகள் இருந்தால் அவற்றை இன்று முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அக்டோபர் 1ம் தேதி அதை செய்ய திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+