மேகதாது அணை கட்ட தீவிரம்.. டெல்லியில் முகாமிட்டு சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர்
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்னைகளை எதிர்கொள்வது பற்றி டெல்லியில் சட்ட நிபுணர்களுடன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.
நீண்ட காலமாகவே, கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.. இந்நிலையில்தான் கர்நாடக முதல்வரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டெல்லி சென்ற பசவராஜ் பொம்மை, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்னை பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல், மூத்த வக்கீல்கள், சட்ட நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.
கர்நாடக பவனில் நடந்த இந்த ஆலோசனைக்கு பின் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: அண்டை மாநிலங்களுடான நதி நீர் பிரச்னைகளை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளேன். மேகதாது விவகாரத்தில் கர்நாடகா நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பாசன திட்டங்கள் சட்ட விரோதமானவை. இது பற்றி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா சார்பில் மனு தாக்கல் தெரிவிக்கப்படும். மத்திய அரசிடமும் இந்த விவகாரம் பற்றி பேசுவோம்.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications