ராஜ்யசபாவில் பாஜகவுக்கு நெருக்கடி? 10 இடங்கள் யாருக்கு? காங்கிரஸ் கை ஓங்குமா? யுத்தம் ரெடி!
டெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர் 2024 மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளனர். இதனால், மொத்தம் 10 இடங்கள் காலியாக உள்ளன. ஆகவே ராஜ்யசபாவில் பாஜகவின் பெரும்பான்மை கேள்விக்குறி ஆகலாம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 240 தொகுதிகள்தான் கிடைத்துள்ளது. கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் இக்கட்சி தனது 63 தொகுதிகளை இழந்துள்ளது.

ஆட்சி அமைக்க 272 சீட்டுகள் தேவை என்பதால் கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் மூன்றாவது முறையாக மோடி ஆட்சியை அமைத்துள்ளார். குறிப்பாகத் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பலத்துடன் ஆட்சியை அமைத்துள்ளது என்.டி,ஏ. கூட்டணி.
பாஜகவுக்கு இந்த முறை மக்களவையில் பெரும்பான்மை கிடைக்காததால், அக்கட்சி வரும் காலங்களில் தனது பலத்தை ராஜ்யசபாவிலும் இழுக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஹரியான மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக தனது பலத்தை இழுக்க நேரிடும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அசாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜ்யசபா எம்பிகளின் பதவிக் காலம் முடிய உள்ளது. இப்போது பதவியில் உள்ள பாஜக உறுப்பினர்கள் வீடு திரும்ப உள்ளனர்.
ராஜ்யசபா செயலகம், ஏழு மாநிலங்களிலிருந்து காலியாக உள்ள 10 இடங்களை அறிவிக்க உள்ளது. ஏனென்றால் இப்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள சிலர் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் எம்பி ஆகியுள்ளனர்.
அப்படி வெற்றி பெற்றவர்கள் ஏதேனும் ஒரு பதவியில் மட்டுமே நீடிக்க முடியும். அதன்படி அவர்கள் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் போது அந்த இடங்கள் காலியாக அறிவிக்கப்படும்.
ஆனால், இதற்கான அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அப்படி அறிவிக்கும் பட்சத்தில் 5 மாநிலங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாஜக வேட்பாளர்கள் வெளியேறக்கூடும்.
காலியாக உள்ள மொத்த 10 சீட்டுகளில் பாஜக 7, இரண்டு காங்கிரஸ், ஒன்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வசம் உள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன
பாஜக சார்பில் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ள சர்பானந்தா சோனோவால் அசாம் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வருகிறார். அடுத்து மத்தியப் பிரதேச ராஜ்ய சபா உறுப்பினரான ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராகி உள்ளார். இந்த 2024இல் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள குணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
பியூஷ் கோயல் மகாராஷ்டிர மாநில சார்பில் ராஜ்யசபாவில் உள்ளார். அவரும் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.
முறைப்படி ஜோதிராதித்ய சிந்தியா, பியூஷ் கோயல் ஆகிய இருவரும் மாநிலங்களவைப் பதவியை இவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
மேலும் அசாம்,பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்கள் காலியாக உள்ளன. கூடவே ஹரியானா,மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் காலியாக உள்ளன.
அசாமில் 2 ராஜ்யசபா இடங்களையும், திரிபுரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் உள்ள தலா ஒரு இடத்தையும் தக்கவைக்க, சட்டப் பேரவைகளில் பாஜகவுக்கு போதுமான எண்ணிக்கைகள் உள்ளன.

பீகாரிலும் பாஜகவும் ஆர்ஜேடி கட்சியும் தலா ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். மாநில சட்டமன்றத்தில் என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இரண்டிற்கும் போதுமான எண்ணிக்கை இருக்கின்றன..
ஆனால், மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் காலியாக இருக்கும் இடங்களைத் தக்க வைக்க பாஜக கடும் சவாலைச் சந்திக்கலாம் எனத் தெரிகிறது.
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபையின் பலம் இப்போது தற்போது 87 ஆகக் குறைந்துள்ளது. அதில் பாஜகவுக்கு 40 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவிலிருந்து பிரிந்த துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான ஜேஜேபிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். 5 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் இந்திய தேசிய லோக்தளம், ஹரியானா லோகித் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 1 எம்எல்ஏ உள்ளனர்.
பாட்ஷாபூர் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ராகேஷ் தௌல்தாபாத் கடந்த மாதம் காலமானார். மற்றொரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ரஞ்சித் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இந்த லோக்சபா தேர்தலில் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸின் ஜெய் பிரகாஷிடம் அவர் தோல்வியடைந்தார்.
இன்னொரு பக்கம் பார்த்தால் ஹரியானாவில் சுயேச்சை எம்.எல்.ஏ நயன் பால் ராவத் மற்றும் எச்.எல்.பி எம்.எல்.ஏவான கோபால் காந்தா ஆகியோரின் ஆதரவால் பாஜகவின் பலம் 43 ஆகச் சட்டசபையில் உயர்ந்துள்ளது.
மீதமுள்ள 44 எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி முகாமில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸின் 20 பேர் மற்றும் ஜேஜேபியின் 10 பேர் உள்ளனர். மிச்சமுள்ள நான்கு சுயேச்சைகளில் 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து உள்ளனர். மேஹம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சுயேச்சை எம்.எல்.ஏ., பால்ராஜ் குண்டு, எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை.
ஐஎன்எல்டியின் அபய் சௌதாலாவும் இதுவரை எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை. ஆகவே அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் பெற்று விட்டால், ஹரியானாவில் பாஜகவைத் தோற்கடிக்க முடியும் என்று காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.
குறைந்தது 6 ஜேஜேபி எம்.எல்.ஏக்கள் துஷ்யந்த் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்களில் 2 எம்.எல்.ஏக்களான ஜோகிராம் சிஹாக், ராம் நிவாஸ் சுர்ஜாகேரா ஆகியோர் பாஜகவுக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கு ஜேஜேபி கடிதம் கொடுத்துள்ளது.
எனவே, ஹரியானாவில் காலியாக உள்ள ஒரே ராஜ்யசபா தொகுதியைக் காங்கிரஸ் கட்சியால் கைப்பற்றும் அளவுக்குத் தேவையான எண்ணிக்கையை அந்தக் கட்சியால் திரட்ட முடியாமல் போகலாம்.
தற்போது 45 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பாஜக கூறுகிறது. இருப்பினும், அது நடக்காது என்கிறது காங்கிரஸ்.
மகாராஷ்டிராவிலும் இதே பிரச்சினை பாஜக சந்திக்கலாம். என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டுக்கும் மோடி 3.0 அமைச்சரவையில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
குறைந்த எம்பிக்களைக் கொண்டுள்ள குமாரசாமி கட்சிக்குக் கிடைத்துள்ளது. ஆகவே அதிருப்தி நிலவி வருகிறது. அதனால் பாஜக ராஜ்யசபாவில் சில இடங்களை இழக்கலாம்.
மேலும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சி.வேணுகோபால் (ராஜஸ்தான்) தீபேந்தர் ஹூடா (ஹரியானா) ஆகி இரண்டு பேரால் ராஜ்யசபாவில் 2 இடங்கள் காலியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications