கோலி பேச்சு.. கொந்தளித்த பிசிசிஐ! மீண்டும் பஞ்சாயத்து - தோனி பற்றி பேசியது பொய்யாம் - பரபர விளக்கம்
டெல்லி: டெஸ்ட் கேப்டன் பதவிலிருந்து விலகிய பிறகு யாருமே தன்னை தொடர்புகொள்ளவில்லை என்று விராட் கோலி பேசியதில் உண்மையில்லை என்று பிசிசிஐ நிர்வாகி தெரிவித்து இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த வாரம் நீண்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த லீக் சுற்று போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.

பாகிஸ்தான் வெற்றி
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை கடந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

விராட் கோலி பேட்டி
இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் கேட்ச் தவறவிட்டது குறித்து பேசினார். "நெருக்கடியான நேரத்தில் யாரும் தவறு செய்வார்கள். இது பெரிய போட்டி. சூழலும் கொஞ்சம் நெருக்கடியாக சென்றுகொண்டிருந்தது. மூத்த வீரர்களிடம் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த முறை இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது உங்களால் கேட்சை பிடிக்க முடியும்." என்றார்.

தோனி மட்டுமே அழைத்தார்
தொடர்ந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தருணம் குறித்து பேசிய அவர், "நான் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது தோனி மட்டுமே மெசேஜ் செய்தார். பலரிடம் எனது எண் இருந்தும் தோனியிடமிருந்து மட்டுமே அழைப்பு வந்தது. நமது சில தொடர்புகள் நம்பிக்கைக்கு உரியதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனக்கு யோசனை வழங்க விரும்புவோர் நேர் நேராக வாருங்கள்." என்றார்.

பிசிசிஐ நிர்வாகி விளக்கம்
இந்த நிலையில் விராட் கோலியின் பேச்சு குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் இன்சைட் ஸ்போர்ட் என்ற இணையதளத்திடம் தெரிவித்ததாவது, "விராட் கோலிக்கு நாங்கள் அனைவரும் ஆதரவு அளித்தோம். தனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று அவர் சொன்னதில் உண்மை இல்லை. அவர் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஓய்வை வழங்கினோம். அவர் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு பிசிசிஐயில் உள்ள அனைவரும் சமூக வலைதளங்களில் வாழ்த்தினோம். எனவே அவர் எதைப்பற்றி பேசினார் என்று எனக்கு தெரியவில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications