மாதஊதியம் ரூ.50,600 வரை! 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க? பிஇசிஐஎல்-லில் வேலை! மிஸ் பண்ணாதீங்க
டெல்லி: மத்திய அரசின் பிஇசிஐஎல் எனும் பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லேப் டெக்னீசியன் உள்பட 6 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.28,600 முதல் ரூ.52,300 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (Broadcast Engineering Consultants India Limited அல்லது BECIL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் இதன் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 6 பிரிவுகளில் காலியாக உள்ள 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: பிஇசிஐஎல் நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்சி பிரிவில் ஓடி டெக்னீக்கல் படிப்பு அல்லது 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளேமா ஓடி டெக்னிக் அல்லது 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.50,600 வழங்கப்படும்.
ஸ்பீச் தெரபிஸ்ட்: ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஎஸ்டி டிகிரியை ஸ்பீச் மற்றும் ஹியரிங் படிப்பை முடித்து 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபருக்கும் மாதம் ரூ.50,600 சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓடி டெக்னீசியன்: இந்த பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு பிஎஸ்சி பிரிவில் ஓடி டெக்னீக்கல் படிப்பு அல்லது 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளேமா ஓடி டெக்னிக் அல்லது 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக ரூ.50,600 வழங்கப்படும்.
மேனேஜர்/சூப்பர்வைசர்/கியாஸ் ஆபிசர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் அல்லது டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து 7 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 30 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டு்ம. மாதசம்பளமாக ரூ.52,300 வழங்கப்படும்.
டிஇஓ: டிஇஓ(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட .ள்ளனர். 10, பிளாஸ் 2 படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் ஒரு மணிநேரத்தில் 8 ஆயிரம் எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். 18 வயது முதல் 27 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.28,600 வழங்கப்படும்.
லேப் டெக்னீசியன்: இந்த பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்லாம். விண்ணப்பத்தாரர்கள் டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.30,100 வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.becil.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் [email protected], [email protected] ஆகிய இ-மெயில் முகவரி அல்லது 0120 - 4177860 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications