Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுனெஸ்கோ உலக நினைவகப் பதிவேட்டில் பகவத் கீதை, பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் சேர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் ஸ்ரீமத் பகவத் கீதை (Bhagavad Gita) மற்றும் பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் ஆகிய இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலகளவில் உள்ள இந்தியர்களுக்கு பெருமையான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் உள்ள முக்கிய கலாச்சாரம், பாரம்பர்யம் ஆகியவற்றை அங்கீகரித்து பாதுகாப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக நினைவகப் பதிவேடு உருவாக்கப்பட்டது. அதில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949), ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பிரகடனம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன.

Unesco Bhagavat Gita

தற்போதுவரை உலக நினைவகப் பதிவேட்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன. கடந்தாண்டு கூட இந்தியாவில் இருந்து ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய இலக்கிய படைப்புகள் சேர்க்கப்பட்டன. இந்நிலையில், தற்போது பகவத் கீதை மற்றும் பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தன் எக்ஸ் பக்கத்தில், "நம் பாரத நாட்டின் நாகரிகம், பாரம்பரியத்தின் வரலாற்று தருணம் இது. ஶ்ரீமத் பகவத் கீதையும், பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரமும் யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த சரித்திர பதிவேட்டில் இந்தியாவின் 14 படைப்புகள் இடம்பெற்றுள்ளன." என்று கூறியுள்ளார்.

கஜேந்திர சிங்கின் பதிவை தன் எக்ஸ் தள பக்கத்தில் ரீ-போஸ்ட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "இது உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நம்முடைய உயர்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரமாகும்.

பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகிய இரண்டும் பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளன. அவற்றில் உள்ள நுண்ணறிவுகள் தொடர்ந்து உலகத்துக்கு ஊக்கமளிக்கும்." என்று பெருமையுடன் கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பு மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+