பீமா கோரேகான் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. கைதான சமூக செயற்பாட்டாளர்களுக்கு பின்னடைவு
Recommended Video

டெல்லி: பீமா கோரேகான் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஐவருக்கும், உச்சநீதிமன்றத்தில் இன்றைய ஒரு உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக, இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் கடந்த வருடம், ஜூன் 18ம் தேதி, கைது செய்யப்பட்டனர். உபா (Unlawful Activities Prevention Act) சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கடந்த ஜனவரி 10ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
முன்னதாக புனே போலீசார், இந்த வழக்கில் கடந்த வருடம் நவம்பர் 16ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், உபா சட்டத்தின்கீழ், 5 சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்ய முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து, குற்றப்பத்திரிக்கையில் தகவல் இல்லை.
இதனிடையே, காவல்துறை கோரிக்கையை ஏற்று புனே நீதிமன்றம், இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் 90 நாட்கள் அவகாசம் கொடுத்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தர முடியாது என கூறிவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை, இன்று விசாரித்த, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, புனே விசாரணை நீதிமன்றம் கூறியபடி, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் 90 நாட்கள் அவகாசம் தரலாம் என உத்தரவிட்டு, மகாராஷ்டிரா ஹைகோர்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு, கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், மனுதாரர்கள், வழக்கமான ஜாமீன் நடைமுறையின்படி ஜாமீன் பெற விண்ணப்பிப்பதை இந்த உத்தரவு தடுக்காது எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. முன்னதாக, மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் செய்துள்ளதால், குற்றம்சாட்டப்பட்டவர்கள், இயல்பாகவே ஜாமீன் பெறும் தகுதியுடையவர்களாகிறார்கள் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications