Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இனிமேல் நிம்மதி.. அரசு ஊழியர்களின் ரேஷன் கார்டுகள்.. வந்தது வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளித்து வரும்நிலையில், புதிய அதிரடி ஒன்றினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மக்களுக்கும், ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

நாடு முழுவதிலுமுள்ள, மக்களின் வாழ்வாதாரத்துக்காக, ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

ration card holders government employees

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தசமயம், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்காகவே, கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) என்ற திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.. இந்த திட்டத்தின்கீழ், இலவசமாக உணவுப் பொருட்கள் 2020ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.. இதன்மூலம் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக தரப்பட்டு வருகிறது. இதனால், கோடிக்கணக்கான குடும்பங்களும் பயன் பெற்று வருகிறார்கள்..

ரேஷன் கார்டுகள்: எனினும், நிறைய பேர் ரேஷன் வாங்காமல் இருக்கிறார்களாம்.. சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வாங்க முடியாமல் இருக்கலாம் என்றாலும், தொடர்ந்து ரேஷன் பொருட்களை முன்வந்து வாங்காமல் விட்டுவிடுகிறார்களாம். ரேஷன் கார்டுகளை பெற்றிருந்தும்கூட, அதனை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்று புகார் முளைத்திருக்கிறதாம்.

இவர்கள் தங்களது ரேஷன் பொருட்களை வாங்கி செல்லாததால், மீதமான ரேஷன் பொருட்களை, 6 மாதமாக ரேஷன் கடையிலிருந்தே வைத்திருந்தாலும்கூட, நுகர்வோர் வந்து பெற்றுக் கொள்வதில்லை என்றும், இதுபோன்றவர்களால், தகுதியான குடும்பங்களுக்கும் உதவி கிடைக்காமல் போய்விடுவதாகவும் சமீபகாலமாக அரசு கவலையுடன் கூறிவருகிறது.

நுகர்வோர்கள்: அதனால்தான், தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் வாங்காத நுகர்வோரின் பெயர்களை, லிஸ்ட்டிலிருந்து நீக்க போவதாக அறிவிப்பும் 4 மாதங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அடுத்த அதிரடியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு இத்திட்டத்தின் பலன் கிடைப்பதில்லை என்பதால், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் உணவு வழங்கல் துறை, புதிய விதிமுறையை வகுத்துள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் KYC செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் ரேஷன் கார்டில் அவர்களுக்கு கிடைத்து வரும் பலன்கள் நின்றுவிடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

கால அவகாசம்: கால அவகாசம் முடிவதற்குள், KYC சரிபார்ப்பை அரிசி அட்டைதாரர்கள் முடிக்கவில்லையானால், ரேஷன் பொருட்களை அவர்களால் பெற முடியாது... ரேஷன் கார்டில் பலன் பெற தகுதியில்லாத ஏராளமானோர் உள்ளதால்தான், இந்த eKYC சரிபார்ப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, ஆண்டு வருமானம் 1.20 லட்சம் உள்ளவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அரசின் பார்வையில் பிபிஎல் கார்டுதாரர்களுக்கான உதவிகளை உணவுத்துறை குறைத்துள்ளது. பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களில் அரசு ஊழியர்களும் இருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. அதாவது, 69 அரசு ஊழியர்களிடம் பிபிஎல் கார்டு இருந்ததால், இவர்களது கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எச்சரிக்கை: அதேபோல, ரூ. 1.20 லட்சம் ஆண்டு வருமானம் கொண்ட 11,753 பிபிஎல் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாரெல்லாம் அரசை ஏமாற்றி கார்டு வாங்கியிருக்கிறார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களைக் கொண்டு ரேஷன் கார்டு வாங்கியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்கும், இந்த அதிரடியால் முறைகேடுகள் ஒழிந்து, ஏழை எளிய மக்கள் முழுமையாக பயன்பெற முடியும் என்றும் நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+