நேரா வர்றாரு.. அவரோட செக்ஷனுக்கு போறாரு.. ஒன்னோ ரெண்டோ எடுக்குறாரு.. விடு ஜூட்.. ஏன்டா இப்படி பண்றே!
டெல்லி: அமெரிக்காவின் கலிபோர்னியாவின் கடைக்குள் சென்ற பெரிய கரடி ஒன்று அங்கிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
பொதுவாக அந்தந்த விலங்குகள் அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ளும். முயல் என்றால் கீரை வகைகள், கோஸ் உள்ளிட்டவைகளை உட்கொள்ளும். மாடு, ஆடு ஆகியவை இலை தழை, தீவனம், கோழியும் தீவனத்தை உண்ணும்.
அது போல் யானை பழங்களையும் கரும்பையும் விரும்பி உட்கொள்ளும். ஒவ்வொரு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தை வைத்து insectivores, herbivores, carnivores, Omnivores என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பூச்சி
அவற்றில் பூச்சிகளை உட்கொள்ளும் விலங்குகள் இன்சக்டிவோர்ஸ் என்றும் தாவரங்களை உண்பவை ஹெர்பிவோர்ஸ் என்றும் மாமிசத்தை உண்பவை கார்னிவோர்ஸ் என்றும் தாவரங்கள் மற்றும் மாமிசத்தை உண்பவை ஆம்னிவோர்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

புலி பசித்தாலும் புல்லை திங்காது
ஆனால் தற்போதைய நவீனயுகத்தில் ஈகோ சிஸ்டத்திலிருந்து வெளியேறி கிடைத்தவற்றை உட்கொள்ளும் நிலைக்கு விலங்குகள் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு காரணம் காடுகளை அழித்து வருவதால் அவை உண்பதற்கு உகந்த உணவு கிடைக்கவில்லை. புலி பசித்தாலும் புல்லை திங்காது என்ற காலம் போய் அது புளி சாதம் சாப்பிடும் என்ற காமெடி காட்சிகள் நினைவுக்கூரத்தக்கது.

ஆம்னிவோர்ஸ்
அந்த வகையில் கரடிகள் ஆம்னிவோர்ஸ்களாகும். அவை தாவரங்களையும் மாமிசத்தையும் உட்கொள்ளும். தானியங்கள், பெர்ரி பழங்கள், மீன்கள், பூச்சிகள், பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றை உட்கொள்கின்றன. இவை மானையும் வேட்டையாடும் என சொல்லப்படுகின்றன. மேலும் இவற்றின் டயட்டில் 70 சதவீதத்திற்கு மேல் மாமிசத்தை காட்டிலும் வேறு உணவுகள் உள்ளன என கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் கரடி
இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு கரடி சாக்லேட் சாப்பிடுகிறதாம். கலிபோர்னியாவில் ஒலிம்பியா வேலியில் 7- லெவன் எனும் கடைக்குள் ஒரு பெரிய கரடி கடந்த 6ஆம் தேதி நுழைந்தது. அதை கண்ட அங்கிருந்த கேஷியர் சிறிது அச்சமடைந்துள்ளார். ஆனால் அந்த கரடியோ அவரை எதுவும் செய்யாமல் நேராக சாக்லேட் செக்ஷனுக்கு போய் அதற்கு பிடித்த ஒரே ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாம்.

கேன்டி
பொதுவாக இரவு நேரங்களில் இந்த பிரவுன் நிற கரடி அவ்வப்போது கடைக்குள் வந்து ஒன்றோ இரண்டோ குறிப்பிட்ட பிரான்ட் சாக்லேட்டை எடுத்துக் கொண்டு செல்கிறதாம். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வெளியிட்ட கேஷியர், இந்த கரடியை சிசிடிவியில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் 20 முதல் 30 சதவீதம் பெரிதாக இருக்கிறது என்கிறார். ஆமா ஒரு சாக்லேட்டை எடுத்து கொண்டு யாருக்கு கொடுக்கும்?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications