ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரெட் பாக்கெட்.. உள்ளே பார்த்தால்.. 'உவ்வே'.. என்ன இப்படி கிளம்பிட்டீங்க?
இந்த ஆன்லைன் ஆர்டர்களால் நேரம் மிச்சமாகிறது என்பது உண்மைதான். ஆனால், அந்த ஆன்லைன் நிறுவனங்கள் எந்த அளவுக்கு பொறுப்பாக நடந்து கொள்கின்றன என்பதுதான் இப்போதைய பிரச்சினையாக உள்ளது.
டெல்லி: ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரெட் (Bread) பாக்கெட்டுக்குள் பெரிய எலி உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாங்கும் பணத்திற்காவது மக்களுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்க வேண்டுமே என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல், இந்த அளவுக்கு மோசமாக ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் நடந்து கொள்வது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஓட்டல் உணவுகளை பரிசோதிக்க உணவு பாதுகாப்புத் துறை இருப்பதை போல, ஆன்லைன் டெலிவரி உணவுகளின் தரத்தை பரிசோதிக்கவும் தனியாக ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆன்லைன் ஆர்டர் அட்டகாசங்கள்
வீட்டுக்கு தேவையான பொருட்கள் முதல் உணவு வரை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்யும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த ஆன்லைன் ஆர்டர்களால் நேரம் மிச்சமாகிறது என்பது உண்மைதான். ஆனால், அந்த ஆன்லைன் நிறுவனங்கள் எந்த அளவுக்கு பொறுப்பாக நடந்து கொள்கின்றன என்பதுதான் இப்போதைய பிரச்சினையாக உள்ளது. உணவு ஆர்டர் செய்வோருக்கு ஆணுறைகள் வழங்கப்படுவதும், பிரியாணி ஆர்டர் செய்தால் ஷூக்கள் அனுப்பி வைக்கப்படுவதும் சகஜமாகிவிட்டன.

கேள்விக்குறியாகும் சுகாதாரம்
இவ்வாறு மாற்றி மாற்றி அனுப்பி வைப்பது கூட பரவாயில்லை. சுகாதாரம் என்பது சிறிது கூட இல்லாமல் பீட்சாவில் கரப்பான் பூச்சி, பிரியாணியில் பல்லி என ஆன்லைன் டெலிவரியில் நடக்கும் அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பணம் கொடுத்து நோயை வாங்கும் நிலையில்தான் பெரும்பாலான ஆன்லைன் நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம்தான் தற்போது நடந்திருக்கிறது.

பிரெட் பாக்கெட்டுக்குள் எலி
நித்தின் அரோரா என்பவர் 'பிளின்கிட்' (Blinkit) என்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் கடந்த 1-ம் ஒரு பிரெட் பாக்கெட்டை ஆர்டர் செய்துள்ளார். இந்த பிளின்கிட் நிறுவனம் ஜொமோட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில், ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே அவருக்கு பிரெட் பாக்கெட் டெலிவரி ஆகிவிட்டது. இதையடுத்து, ஆசையுடன் பிரெட் பாக்கெட்டை திறக்க முயன்ற போது, அதற்குள் ஒரு பெரிய எலி உயிருடன் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருப்பதை நித்தின் அரோரா பார்த்துள்ளார்.

மக்கள் கண்டனம்
இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாக தனது செல்போனில் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், அந்த வீடியோவுடன் 'பிளின்கிட்' நிறுவனத்திலும் அவர் புகார் பதிவு செய்தார். இதற்கு பதிலளித்துள்ள 'பிளின்கிட்' நிறுவனம், தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. ஒரு பிரெட் பாக்கெட்டுக்குள் ஒரு சிறிய பூச்சி இருந்தால் கூட, ஏதோ தவறுதலாக நிகழ்ந்துவிட்டது என எண்ண முடியும். ஆனால், அவ்வளவு பெரிய எலி இருப்பதை கூடவா பார்க்காமல் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்? என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications