"கிறிஸ்தவர்".. நமக்கு அதிக சேவை செய்தது "மிஷனரிகள்" கிடையாது.. இந்து குருமார்கள்: ஆர்எஸ்எஸ் தலைவர்
ஜெய்ப்பூர்: நமது பண்டைய இந்து குருமார்கள், கிறிஸ்தவ மிஷனரிகளை விட அதிகமாக மக்கள் சேவையை செய்திருக்கிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியிருப்பது, மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து முதலாக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாகவே கருதப்படுகிறது..

இதையடுத்து, தங்களுடைய சித்தாந்தங்களையும், கருத்தியல்களையும் நாடு முழுவதும் பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் முழுவீச்சில் இறங்கிவிட்டது.. அந்த வகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பல பொதுக்கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இந்துத்துவா சித்தாந்தத்தின் சிறப்பம்சங்களை விரிவாக பேசி வருகிறார்..
இஸ்லாம் மதம்: குறிப்பாக, 'படையெடுப்பாளர்களுடன் இந்தியாவுக்கு வந்ததுதான் இஸ்லாம் மதம்.. மற்றபடி இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள்தான்' என்று மோகன் பகவத் ஒருமுறை பேசியிருந்தது இஸ்லாமியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இதற்கு பிறகு, தன்னுடைய அணுகுமுறையை மோகன் பகவத் மாற்றிக்கொண்டுவிட்டார்.. முஸ்லிம் தலைவர்களை சந்திப்பது, அவர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவது அவரது இணக்கமான போக்கு அதிகரித்தது. அதுமட்டுமல்ல, முஸ்லிம் மதத்தினரும் நமது சகோதரர்கள்தான் என்றும் சகோதரத்தை வலியுறுத்தி வருகிறார்..

கிறிஸ்தவர்கள்: இந்த அதிரடி மாற்றத்திற்கு ஒருபக்கம் வரவேற்பு இருந்தாலும், மோகன் பகவத் ஏன் இப்படி திடீரென மனமாற்றம் அடைந்துள்ளார்? ஒருவேளை 2024 எம்பி தேர்தலுக்கான வியூகமா இது? என்றும் சிலர் சந்தேகங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி வருகிறார்கள். சமீபத்தில்கூட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ஒரு கருத்து, சர்ச்சையை கிளப்பியது.. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பாக நாட்டில் கல்வி முறை சிறப்பாக இருந்தது.. அப்போது நாட்டில் 70 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.. ஆனால், ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் அது 17 சதவீதமாக குறைந்துவிட்டது.. நம்முடைய பண்டைய கல்வி முறையை பின்பற்றியதால்தான், இங்கிலாந்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்துவிட்டது என்று கூறியிருந்தார்...
கிறிஸ்தவ மிஷினரி: அதாவது, ஆரம்ப காலங்களில் குருக்குல கல்வி முறையில் உயர்ஜாதியினர் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலைமை இருந்த நிலையில், ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகே, அனைத்து தரப்பு மக்களும் பரவலாக கல்வி கிடைக்கும் நிலைமை உருவானதாக வரலாற்று ஆசிரியர்கள் தொடர்ந்து சொல்லி வரும்போது, இதற்கு எதிராக மோகன் பகவத் பேசியிருந்தது அடுத்த விமர்சனத்தை உண்டுபண்ணியது. இப்போது மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் மோகன் பேசியுள்ளார்.. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "ஒரு ஆரோக்கியமான வளமான சமூகம் உருவாக மக்கள் சேவை ரொம்ப முக்கியம்..
ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரை மேலே கொண்டு வருவதாக அந்த சேவை இருக்க வேண்டும்... நம்முடைய நாட்டில் சில புத்திசாலிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால், கிறிஸ்தவ மிஷனரிகள்தான் அதிக சேவை செய்ததாக சொல்வார்கள்.. ஆனால் அது உண்மை கிடையாது.. நமது பண்டைய இந்து குருமார்கள், கிறிஸ்தவ மிஷனரிகளை விட அதிகமாக மக்கள் சேவையை செய்திருக்கிறார்கள்... அதிலும், தென் மாநிலங்களில் பண்டைய இந்து குருமார்கள் செய்த சேவை அளப்பரியது.. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் வழங்கும் சேவையைவிட இந்து ஆன்மிக குருக்களால் வழங்கும் சேவை அதிகம்" என்று பேசியுள்ளார்.. ஆக, சோஷியல் மீடியாவில், இப்போது இதுவும் விவாதத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications