Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்த்து மழையில் விக்ரமன்.. டெல்லி தமிழ் சங்கத்தில் கவுரவித்த திருமா! செல்லும் இடமெல்லாம் சிறப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் மக்கள் ஆதரவை வென்ற விக்ரமன் டெல்லி தமிழ் சங்க விழாவில் கவுரவிக்கப்பட்டு உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் போட்டி முடிந்து வெளியே வந்த பிறகு பலத்த ஆதரவுகளை பெற்று அவருக்கு பல இடங்களில் பாராட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், டெல்லி தமிழ் சங்கத்தின் விழாவில் அவர் கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த மாதம் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம், பத்திரிகையாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான விக்ரமன், மக்கள் தரப்பிலிருந்து வந்த ஷிவின் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இதில் கலந்துகொண்ட விக்ரமன் அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்ற பெரும் தலைவர்களின் முற்போக்கான கருத்துக்களை பேசியும், சக போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுத்தும் விளையாடியதால் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார்.

முற்போக்கு கருத்துக்கள்

முற்போக்கு கருத்துக்கள்

போட்டியாளர்கள் பிற்போக்கான கருத்துக்கள் தெரிவித்தாலோ, உருவ கேலி, பாலின கேலி, தொழிலை கேலி செய்வது போன்று தரக்குறைவாக பேசினாலோ அதை உடனுக்குடன் கண்டித்தும் வந்தார். அதேபோல் குறிப்பிட்ட தரப்பினர், சமூகத்தினர் மீது யாராவது மேம்போக்காக விமர்சித்தாலும் முதலில் அதை விக்ரமன் தட்டிக்கேட்டு வந்தார்.

ஜிபி முத்து, ஷிவின்

ஜிபி முத்து, ஷிவின்

ஒரு முறை போட்டியாளர் சக போட்டியாளைடம் ஷிவின் மீன்காரிபோல் கத்தாதே என சொன்னதை கண்டித்தது தொடங்கி, பெண்கள் என்றால் சமையல் வேலைதான் செய்ய வேண்டும், என்ன மகளாக இருந்தால் வெட்டுவேன், இந்த வயதில் இப்படிதான் பேச வேண்டும் என்று கூறிய ஜிபி முத்துவை கண்டித்தார்.

அசீமை கண்டித்த விக்ரமன்

அசீமை கண்டித்த விக்ரமன்

அதேபோல் பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளர் அசீம் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசியபோது, ஒரு பெண் போட்டியாளரை தள்ளியபோதும், பெண்களை கொச்சைப்படுத்தியும், திருநங்கையான ஷிவினின் உடல்மொழிகளை விமர்சிக்கும் வகையிலும் நடந்துகொண்டபோதும், பேசியபோதும் அவரை தொடர்ந்து கண்டித்தார் விக்ரமன்.

அறம் வெல்லும்

அறம் வெல்லும்

அதேபோல் சங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் பிற்போக்கான கருத்துக்கள் இருந்ததால் தன்னுடைய கொள்கைக்கு எதிரானது என்று கூறி அந்த வேடத்தில் நடிக்க மறுத்தது வரை பல விசயங்களை நேரடியாக கண்டித்தவர் விக்ரமன். இதனால் விக்ரமனை கொண்டாடி தீர்த்த மக்கள், அவர் தெரிவித்த அறம் வெல்லும் என்ற வார்த்தையை டீ சர்டாக தயாரித்ததுடன், பொங்கல் அன்று கோலத்தில் எழுதி ஆதரவளித்தார்கள்.

 தொடரும் ஆதரவு

தொடரும் ஆதரவு

பிக்பாஸ் கோப்பையை விக்ரமன் வெல்வார் என்று ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்த நிலையில், பிக்பாஸ் இறுதிப்போட்டியில் அஜீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனை ஏற்காத மக்கள் சமூக வலைதளங்கள் விஜய் டிவியை புறக்கணிக்க வேண்டும் என்று ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர். போட்டி முடிந்து சில வாரங்கள் கடந்த பிறகும் விக்ரமனுக்கு ஆதரவாகவும், அஜீமுக்கு எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

செல்லும் இடமெல்லாம் சிறப்பு

செல்லும் இடமெல்லாம் சிறப்பு

யூடியூப் சேனல்களும் போட்டிப்போட்டுக் கொண்டு விக்ரமனை நேர்காணல் எடுத்தும், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியும் வருகின்றன. போட்டி முடிந்த பிறகு தனக்கு ஆதரவளித்த திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருமாவளவன் ஆதரித்ததால்தான் தோல்வியடைந்ததாக கூறும் கருத்தையும் அவர் ஏற்கவில்லை. ஹாட்ஸ்டார் மட்டுமின்றி அனைத்து மக்களும் இனி வாக்களிக்கும் வாய்ப்பை உருவாக்க அவர் வலியுறுத்தினர்.

 டெல்லி தமிழ் சங்கம்

டெல்லி தமிழ் சங்கம்

தொடர்ந்து அவரது ரசிகர்கள் டிவிட்டர் ஸ்பேஸில் விக்ரமனை பேச அழைத்துள்ளனர். அவருக்கு பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் 6 கொண்டாட்ட நிகழ்ச்சியில் விக்ரமனை தூய்மை பணியாளர்கள் நேரில் வந்து நன்றி கூறி வாழ்த்தினர். இந்த நிலையில் டெல்லி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

பாராட்டிய திருமாவளவன்

பாராட்டிய திருமாவளவன்

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளரும் எம்பியுமான ரவிக்குமார், தமிழ் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா. முகுந்தன் உள்ளிட்ட டெல்லி தமிழ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விக்ரமனுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். இதையும் விக்ரமன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+