Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் தேர்தல் 2025 LIVE: முதற்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.. 60.13% ஓட்டுகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ம் தேதி நடக்க உள்ளது. வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கும் பணி நவம்பர் 14 அன்று நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பீகார் சட்டமன்றத் தேர்தலில் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் உட்பட 7.4 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Bihar Election 2025  Bihar Assembly Election Polls Phase 1 LIVE News Updates and Highlights in Tamil

பாஜக - ஜேடியூவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகா கூட்டணியான மகாகத்பந்தனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்களுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவில், 18 மாவட்டங்களில் பரவியுள்ள 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர். இந்தத் தேர்தல், பீகாரின் அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியைத் தீர்மானிக்கும் என்பதால், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Nov 06, 2025, 6:12 pm IST

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 60.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளனர்.
Nov 06, 2025, 6:05 pm IST

பீகார் தேர்தலில் 60.13 சதவீத வாக்குகள் பதிவு
Nov 06, 2025, 6:04 pm IST

முதற்கட்டமாக இன்று 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது
Nov 06, 2025, 5:30 pm IST

பீகார் சட்டமன்றத் தேர்தலின் 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
Nov 06, 2025, 4:58 pm IST

பீகாரில் 10 மாவட்டங்களில், பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் விநியோகம் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பீகார் மாநில தேர்தல் ஆணையர், ”முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் அனைத்து தொகுதிகளிலும் எந்த வித பிரச்சினையும் இன்றி வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Nov 06, 2025, 4:10 pm IST

பீகாரில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் நேரலை காட்சிகளை தேர்தல் ஆணையத்தில் உயர் மட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள். பீகாரில் முதல் முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ். சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இவற்றை ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Nov 06, 2025, 3:46 pm IST

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
Nov 06, 2025, 3:45 pm IST

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
Nov 06, 2025, 3:09 pm IST

பீகார் துணை முதல்வர் கார் கன்வாய் தாக்கப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில டிஜிபிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Nov 06, 2025, 2:51 pm IST

பின்னர் சின்ஹா கூறியதாவது: நான் இந்த கிராமத்தில்தான் உள்ளேன். கூட்டம் என்னை நோக்கி நெருக்கமாக வந்து கொண்டு இருக்கிறது. சிறப்பு படையை இங்கே அனுப்புங்கள். நான் இங்கே அமர்ந்து போராட இருக்கிறேன். கற்களையும், மாட்டுச்சாணத்தையும் வீசியுள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் குண்டர்கள் இதை செய்துள்ளனர். அதிகாரத்திற்கு வராமலே அவர்களின் அடாவடியை பாருங்கள். எனது பூத் ஏஜெண்டை மிரட்டியுள்ளனர். வாக்காளர்கள் வருவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள்” என்றார்.
Nov 06, 2025, 2:44 pm IST

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் குண்டர்களே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று விஜய் சின்ஹா குற்றம் சாட்டினார். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் குமார் சின்ஹா பேசினார்.
Nov 06, 2025, 2:14 pm IST

பீகார் லக்கிசராய் தொகுதியின் பாஜக வேட்பாளரும், துணை முதலமைச்சருமான விஜய் குமார் சின்ஹாவின் காரை ராஷ்டிரிய ஜனதா தள தொண்டர்கள் முற்றுகையிட்டுச் செருப்புகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Nov 06, 2025, 2:12 pm IST

பிற்பகல் 1 மணி நிலவரப்படி பீகாரில் 42.31% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
Nov 06, 2025, 1:38 pm IST

பீகார் தானாபூரில் படகு மூலம் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல பொதுமக்கள் வரிசையாக நிற்கிறார்கள். பீகாரில் காலை முதலே பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Nov 06, 2025, 12:58 pm IST

பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் மற்றும் அவரது மனைவி மாயா சங்கர் ஆகியோர் பாட்னாவில் உள்ள வாக்குச் சாவடியில் தங்கள் வாக்கைச் செலுத்தினர். மூத்த தலைவர் குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வந்து ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டார்.
Nov 06, 2025, 12:31 pm IST

பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் சிசிடிவிக்கள் இந்த முறை பொருத்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கும் நிலையில் சிசிடிவிக்கள் அதிகரிப்பு
Nov 06, 2025, 11:59 am IST

பாட்னா நகர துணை காவல் கண்காணிப்பாளர் அனு குமாரி, காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் பீகாரில் வாக்குப்பதிவு சீராக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். பெரிய அளவிலான பிரச்சனைகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சிறிய குறைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Nov 06, 2025, 11:32 am IST

காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணிக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் மின்சாரம் திட்டமிட்டு துண்டிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாஜக தரப்பின் அழுத்தத்தின் பெயரில் இப்படி நடப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன
Nov 06, 2025, 10:40 am IST

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Nov 06, 2025, 10:21 am IST

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தனது மகன்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வாக்களித்தார். "என் இரு மகன்களுக்கும் என் வாழ்த்துக்கள். தேஜ் பிரதாப் தனியாகப் போட்டியிடுகிறார். நான் அவர்களின் தாய் - இருவருக்கும் நல்ல அதிர்ஷ்டம்" என்று அவர் கூறினார்.
Nov 06, 2025, 9:55 am IST

வாக்களித்த பிறகு துணை முதல்வர் மற்றும் பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்ஹா, "நாங்கள் ஜனநாயகத்தின் மிகப்பெரிய விழாவில் பங்கேற்றோம். இன்று, பீகார் நல்ல அமைதியான ஆட்சியில் தொடரும்.. அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாக்களிக்க வேண்டும்" என்று கூறினார்.
Nov 06, 2025, 9:13 am IST

அலினகர்: பாஜக இங்கே 29 வயதான பிரபலமான நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூரை களமிறக்கி, இளைஞர்களையும், கலாச்சாரப் பெருமையையும் அணிதிரட்ட திட்டமிட்டுள்ளது. இவர் அனுபவம் வாய்ந்த RJD மூத்த தலைவர் பினோத் மிஸ்ராவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
Nov 06, 2025, 8:43 am IST

மொகாமா: மிகவும் சர்ச்சைக்குரிய இந்தத் தொகுதியில், களம் சூடு பிடித்துள்ளது. கொலை வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட JD(U) கட்சியின் அனந்த் சிங், தனது நீண்டகால தொகுதியை தக்கவைத்துக் கொள்ளப் போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Nov 06, 2025, 8:22 am IST

மகுவா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் பிரிந்த மகனான தேஜ் பிரதாப் யாதவ், தனது புதிய கட்சியான ஜனசக்தி ஜனதா தளம் (JJD) சார்பில் போட்டியிடுகிறார். இவர் RJD-யின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் முகேஷ் குமார் ரௌஷனை எதிர்த்து களமிறங்குகிறார். இது பாரம்பரிய யாதவ வாக்குகளைப் பிரித்து தேர்தல் முடிவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
Nov 06, 2025, 7:51 am IST

தாராபூர்: முங்கர் மாவட்டத்தில் உள்ள இந்தத் தொகுதியில், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி (பாஜக) RJD-யின் அருண் ஷாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். பாஜகவின் முக்கிய OBC தலைவரான சௌத்ரி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் இது முக்கியமான தொகுதியாகும்.
Nov 06, 2025, 7:32 am IST

ராகோபூர்: முதல் கட்டத்தின் இது மிக முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு மகாகத்பந்தனின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் (RJD), பாஜகவின் சதீஷ் குமாருக்கு எதிராக களமிறங்கியுள்ளார். யாதவர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில், தேஜஸ்வி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்வது RJD-யின் மரியாதைக்கும், INDIA கூட்டணிக் கட்சிகளின் மன உறுதிக்கும் மிக முக்கியமானது.
Nov 06, 2025, 7:14 am IST

பீகாரின் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளை இந்த முதல் கட்ட வாக்குப்பதிவு உள்ளடக்கியுள்ளது. நியாயமான தேர்தலை உறுதி செய்ய, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெப்காஸ்டிங் மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பட்னா, வைஷாலி, முசாபர்பூர், கோபால்கஞ்ச், முங்கர் மற்றும் தர்பங்கா போன்ற முக்கிய பகுதிகள் உட்பட மத்திய மற்றும் வட பீகாரின் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Nov 06, 2025, 7:01 am IST

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தற்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
Nov 06, 2025, 6:46 am IST

பாஜக - ஜேடியூவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகா கூட்டணியான மகாகத்பந்தனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்களுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது.
Nov 06, 2025, 6:14 am IST

மேலும், ஷேக் புரா, பார்பிகா, அஸ்தாவான், பீகார் ஷெரீப், ராஜ்கீர் (தனி), இஸ்லாம்பூர், ஹில்சா, நாலந்தா, ஹர்னாவுட், மோகாமா, பார்ஹ், பக்திபூர்பட்னா, திகா, பாங்கிப்பூர், கும்ரார், பட்னா சாகிப், பதுஹா, தானாப்பூர், மானெர், புல்வாரி (தனி), மசௌரி (தனி), பாலிகஞ்ச், பிக்ரம், சந்தேஷ், பர்ஹாரா, அர்ரா, அகியான் (தனி), தாராரி, ஜகதிஷ்பூர், ஷாப்பூர், பிரம்மபூர், பக்ஸர், டும்ராவ்ன், ராஜ்பூர் (தனி) ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+