Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

95வது முறையாக தோல்வி! பரிதாப நிலையில் காங்கிரஸ்.. இனியாவது ராகுல் காந்தி பிரச்சனையை உணர்வாரா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சி சந்தித்த 95 சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2004 முதல் தற்போது வரை பல்வேறு மாநில தேர்தல்களிலும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருப்பதால், விரைவில் 100 தேர்தல்களில் தோல்வி அடைந்த பெருமையை ராகுல் காந்தி பெறுவார் என்று பார்க்கப்படுகிறது.

பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மகாகத்பந்தன் கூட்டணி 37 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. என்டிஏ கூட்டணி vs மகாகத்பந்தன் கூட்டணி என்று இருந்த போட்டி, தற்போது ஜேடியூ - பாஜக என்று மாறி இருக்கிறது.

Bihar Election 2025 Congress 2025 Bihar Election Results 2025

இதில் மகாகத்பந்தன் கூட்டணி தரப்பில் ஆர்ஜேடி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வெறும் 4 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் இருப்பது இந்தியா கூட்டணி ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி இணைந்த நடந்த 95 சட்டசபைத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்த 2007 மற்றும் 2017 தேர்தல், உத்தரகாண்டில் நடந்த 2007, 2017 மற்றும் 2022 தேர்தல், உத்தரப் பிரதேசத்தில் நடந்த 2007, 2012, 2017 மற்றும் 2022 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

அதேபோல் பீகாரில் 2005, 2010, 2020 மற்றும் 2025 தேர்தலிலும், சிக்கிம் மாநிலத்தில் 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களிலும், அசாம் மாநிலத்தில் 2016 மற்றும் 2021 தேர்தலிலும், நாகாலாந்தில் நடந்த 2008, 2013, 2018 மற்றும் 2023 ஆகிய தேர்தல்களிலும்,மணிப்பூரில் நடந்த 2017 மற்றும் 2022 ஆகிய தேர்தல்களிலும், மிசோரத்தில் நடந்த 2018 மற்றும் 2023 தேர்தல்களிலும், மேற்கு வங்கத்தில் நடந்த 2006, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.

அதேபோல் திரிபுராவில் நடந்த 2008, 2013, 2018 மற்றும் 2023 ஆகிய தேர்தல்களிலும், மேகாலயாவில் நடந்த 2018 மற்றும் 2023 தேர்தல்களிலும், ஜார்க்கண்டில் நடந்த 2005, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதேபோல் ஒடிசாவில் 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களிலும், சட்டீஸ்கரில் 2008, 2013 மற்றும் 2023 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் 2011 மற்றும் 2016 தேர்தலிலும், புதுச்சேரியில் 2011 மற்றும் 2021 தேர்தலிலும், கேரளாவில் 2006, 2016 மற்றும் 2021 தேர்தல்களிலும், கர்நாடகாவில் 2004, 2008 மற்றும் 2018 தேர்தல்களிலும், கோவாவில் 2012, 2017 மற்றும் 2022 தேர்தல்களிலும்ம், ஆந்திராவில் 2014, 2019 மற்றும் 2014 தேர்தல்களிலும், தெலங்கானாவில் 2014 மற்றும் 2018 தேர்தல்களிலும், மகாராஷ்டிராவில் 2014, 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும் தோல்வி அடைந்திருக்கிறது.

அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் 2008, 2013, 2018 மற்றும் 2023 ஆகிய தேர்தல்களிலும், ராஜஸ்தானில் 2013 மற்றும் 2023 தேர்தல்களிலும், குஜராத்தில் 2007, 2012, 2017 மற்றும் 2022 தேர்தல்களிலும், டெல்லியில் 2013, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களிலும், ஹரியானாவில் 2014, 2019 மற்றும் 2024 தேர்தல்களிலும், பஞ்சாப் மாநிலத்தில் 2007, 2012 மற்றும் 2022 தேர்தல்களிலும், ஜம்மு - காஷ்மீரில் 2014 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் பழைய பாதைக்கு திரும்புமா என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+