ஓடும் பேருந்தில் சின்ன பெண்ணிடம் இளைஞர் அசிங்கமான அத்துமீறல்! டெல்லியில் பகீர்
டெல்லி: தலைநகர் டெல்லியில் பேருந்தில் சிறுமியின் முன்னிலையில், இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நபரைப் பிடித்த நடத்துநர், போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும், பெண்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்களும் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. மேலும், பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து துணிச்சலாகப் புகார் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் பகீர்
நமது நாட்டில் பொது இடங்களிலேயே பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இந்த காலத்தில் தான் பெண்கள் இவை குறித்து துணிச்சலாகப் புகார் தருகிறார்கள். இதனால் இதுபோன்ற சம்பவங்கள் எளிதாக வெளிச்சத்திற்கு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படித்தான் தலைநகர் டெல்லியில் சிறுமி முன்பு, ஆண் ஒருவர் தனது பிறப்புறுப்பை எடுத்து சுய இன்பம் செய்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது.

நடவடிக்கை இல்லை
தேசிய தலைநகர் ரோகினி பகுதியில் பேருந்தில் சிறுமியின் முன் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால், குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக யாராவது புகார் கொடுத்தால் நிச்சயம் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது
இந்தச் சம்பவம் நடந்த போது டெல்லி பேருந்தில் சற்று கூட்டம் குறைவாக இருந்துள்ளது. அப்போது சிறுமிக்கு அருகே இருந்த இந்த இளைஞர், திடீரென தனது பிறப்புறுப்பை வெளியே எடுத்து சுய இன்பம் செய்யத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்து அஞ்சிய அந்த சிறுமி கத்தி கூச்சல் எழுப்பியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருந்த நடத்துநர் சந்தீப் சகாரா சுய இன்பம் செய்த அந்த நபரைப் பிடித்துள்ளார்.

கதறி அழுத இளைஞர்
தன்னை இப்படிப் பிடிப்பார்கள் என்று அந்த நபர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த கீழ்த்தரமான செயலை செய்ததால், அந்த நபர் அங்கேயே கண்ணீர் விட்டுக் கதறத் தொடங்கிவிட்டார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை நடத்துநர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருப்பினும், யாரும் இந்த விவகாரத்தில் புகார் அளிக்கவில்லை என்பதால் அந்த நபர் கைது செய்யப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புகார் இல்லை
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வடக்கு ரோகினி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியைத் தொடர்பு கொண்டு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. அல்லது இது தொடர்பாகப் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், அந்த சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் புகார் அளித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications