Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பில்கிஸ் பானு வழக்கு.. ஆவணங்களுடன் தயாராக இருங்கள்.. குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதைப் பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின், மிகப் பெரிய வன்முறை கலவரம் ஏற்பட்டது. நாட்டில் ஏற்பட்ட பெரிய கலவரங்களில் ஒன்றான இந்த வன்முறையில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது குஜராத் மாநிலத்தில் மிக மோசமான பல சம்பவங்களும் நடந்தன. பலரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர், பெண்கள் பலரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

 பில்கிஸ் பானு

பில்கிஸ் பானு

குஜராத் கலவரத்தில் அரங்கேறிய மிகக் கொடூர சம்பவம் தான் பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம். அந்த சமயத்தில் அகமதாபாத் ரன்திக்பூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அடித்தே கொல்லப்பட்டனர். மேலும், அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அப்போது இருந்த பில்கிஸ் பானுவின் சிறு குழந்தை அடித்தே கொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் அப்போதே நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தை சிபிஐ விசாரித்தது.

 முன்கூட்டியே விடுதலை

முன்கூட்டியே விடுதலை

அதன்படி, 2004இல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் சிறையில் இருந்த நிலையில், அவர்கள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவர்களை அம்மாநில அரசு சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்தது. இப்படியொரு கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைகளைச் செய்த செய்த அவர்கள் எப்படி முன்கூட்டியே விடுவிக்கலாம் என்று பலரும் எதிர்த்தனர். இதற்குப் பலரும் மிகக் கடுமையாக எதிர்ப்பு பதிவு செய்திருந்தனர்.

 சுப்ரீம் கோர்டில் வழக்கு

சுப்ரீம் கோர்டில் வழக்கு

இதற்கிடையே குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதைப் பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது. பானோ தாக்கல் செய்த ரிட் மனு மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த வழக்கை அவசர வழக்காகப் பட்டியலிட உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

 விதிகளைப் பின்பற்றவில்லை

விதிகளைப் பின்பற்றவில்லை

கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி, 11 ஆயுள் கைதிகளைக் குஜராத் அரசு முன்கூட்டியே விடுவித்தது என்பது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியது என்று கூறி பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 குற்றவாளிகளைக் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட விதிகளை முற்றிலும் புறக்கணித்து குஜராத் அரசு இந்த விடுதலை உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 இன்று விசாரணை

இன்று விசாரணை

மனிதாபிமானமற்ற வன்முறை மற்றும் மிருகத்தனமான மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றைப் புரிந்த இந்த 11 குற்றவாளிகளுக்கும் விடுதலை அளித்து, அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்த மத்திய மாநில அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல பலரும் இது குறித்து மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம் கேள்வி

உச்ச நீதிமன்றம் கேள்வி

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுவிக்க மற்ற வழக்குகளில் பின்பற்றும் விதிமுறைகளை பின்பற்றதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், "ஏற்கனவே வழக்கு கொலை வழக்குகளில் குற்றவாளிகள் சிறையில் வாடுகிறார்கள். மற்ற வழக்குகளைப் போலவே இந்த வழக்கிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா" என்று கேள்வி எழுப்பினர்.

ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

மேலும், இதற்கான அனைத்து ஆவணங்களையும் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஒரே ஒரு குற்றவாளி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குஜராத் அரசு ஆளும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் அளித்த பரிந்துரைப் படி காலாவதியான கொள்கையின் அடிப்படையில் அனைவரையும் விடுதலை செய்துள்ளதாகப் புகார்கள் முன்வைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+