ஆந்திரா உட்பட 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல்! மத்திய அரசு எச்சரிக்கை.. சிக்கன் & முட்டை சாப்பிடலாமா?
டெல்லி: கடந்த சில ஆண்டுகளாகவே பறவை காய்ச்சல் என்பது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இந்த பாதிப்பு பரவுவதால் பல லட்சம் கோழிகள் கொல்லப்பட்டும் வருகிறது. இதற்கிடையே இப்போது 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதாகவும் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நமது நாட்டில் அசைவ உணவு பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவாக சிக்கன் இருக்கிறது. மேலும், மனிதர்களின் புரத தேவையைப் பூர்த்தி செய்வதிலும் சிக்கனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது பறவை காய்ச்சல் பரவுவதும் இதனால் பல லட்சம் கோழிகள் கொல்லப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

பறவை காய்ச்சல்
இந்தாண்டும் கூட கடந்த ஜனவரி முதல் ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் H5N1 வைரஸ் எனப்படும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோழிப் பண்ணைகள் மற்றும் பறவை சந்தைகள் போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு
தேவையான தொழில்நுட்ப உதவிகள் இருப்பதை உறுதி செய்து, தேசிய செயல் திட்டத்தின்படி நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக மேலும், "பறவை சந்தைகள், இடம்பெயர்ந்து வரும் பறவைகளின் வாழ்விடங்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். இதனால் பறவைக் காய்ச்சலுக்கான தேசிய செயல் திட்டத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கால்நடை மற்றும் ஆய்வகத் திறன்களை வலுப்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதுவரை சுமார் 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ள நிலையில், 5500 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசுக்குச் சொந்தமான கோழிப் பண்ணையில் தான் பறவை காய்ச்சல் பரவியதாகத் தெரிகிறது. இதனால் அங்குள்ள அனைத்து அரசு கோழிப் பண்ணைகளிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 மாநிலங்கள்
இதுவரை ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஹார்கண்ட் என இதுவரை 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதியாகியுள்ளது. பறவை காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோழி மற்றும் முட்டைகளைச் சாப்பிடவே பலரும் அஞ்சுகிறார்கள். ஆனால், பறவை காய்ச்சலால் சிக்கன், முட்டையைச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.
சிக்கன் & முட்டை சாப்பிடலாமா?
அதாவது முறையாக சிக்கனை சமைத்துச் சாப்பிட்டால் எந்த நோயும் ஏற்படாது.. ஏனென்றால் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் H5N1 வைரஸ் 70°C வெப்பத்தில் கொல்லப்படும். இதனால் முறையாகச் சமைத்துச் சாப்பிடும் சிக்கனால் எந்தவொரு ஆபத்தும் இல்லை. நமது நாட்டில் சிக்கன் குழம்பு பிரியாணி என எதுவாக இருந்தாலும் அனைத்துமே 70 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்தியே சமைப்பார்கள். இதனால் வைரஸ் இருந்தாலும் அழிந்துவிடும்.
முட்டைக்கும் இதே கதைதான்.. முறையாகச் சமைத்துச் சாப்பிட்டால் எந்தவொரு பாதிப்பும் வராது. வைரஸ் இருந்தாலும் அழித்துவிடும். அதேரேம் பச்சை முட்டை, ஆஃப் பாயில், கலக்கி என முறையாகச் சமைக்கப்படாத உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது!
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications