4 மாநில பாஜக தலைவர்கள் ‘திடீர்’ மாற்றம்.. பரபர ஆக்ஷனில் டெல்லி தலைமை.. அண்ணாமலை ஜஸ்ட் எஸ்கேப்?
டெல்லி : பாஜக தேசிய தலைமை, 4 மாநிலங்களில் பாஜக மாநிலத் தலைவர்களை மாற்றியுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படக்கூடும் என பேச்சுகள் நிலவிய நிலையில், தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், 4 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது பாஜக தலைமை.
தமிழ்நாடு பாஜகவில் சமீப நாட்களாக பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், தமிழ்நாடு மாநில தலைமையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பாஜக மாநில தலைவர்கள் மாற்றம்
பாஜகவின் டெல்லி மாநில தலைவராக வீரேந்திர சச்தேவாவை நியமித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா. சச்தேவா தற்போது வரை டெல்லி பாஜக செயல் தலைவராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. பீகார் மாநில பாஜக தலைவராக இருந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக தற்போது பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சாம்ராட் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாநில தலைவர்கள்
ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி சிபி ஜோஷிக்கு, ராஜஸ்தான் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் ஆம்பர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சதீஷ் பூனியாவுக்குப் பதிலாக ஜோஷி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் ஒடிசா மாநில தலைவராக முன்னாள் மாநில அமைச்சரான மன்மோகன் சமல் நியமிக்கப்படுவதாக தேசியத் தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என்று அண்ணாமலை சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூடத்தில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பாஜக மூத்த நிர்வாகிகள் யாரும் அண்ணாமலையின் இந்தப் பேச்சை ஏற்கவில்லை. பாஜக மேலிட தலைவர்களிடமும் அண்ணாமலையின் இந்தப் பேச்சும், சமீபமாக பாஜக நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருவதும் கடும் அதிருப்தியை உருவாக்கி இருப்பதாகவும், அதனால் மாநில தலைவர் மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது.

ஆக்ஷன் இல்லை
ஆனால், தற்போது டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா ஆகிய 4 மாநில தலைவர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இல்லை என்பது அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய தலைவர்களைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ள நிலையில், இந்த 4 மாநிலத் தலைவர்கள் மாற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications