பாஜக தலைவர் மாற்றப்படுகிறார்.. இவர்தான் புதிய தலைவர்.. மொத்தமாக மாறும் காட்சிகள்!
டெல்லி: பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது
தலைவர் மாற்றம்: இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தலைவர்.
சிவராஜ் சிங் சவுகான் இந்த லோக்சபா தேர்தலில் ஓரங்கட்டப்பட்டார். மோடி, நட்டா, அமித் ஷா மூலம் பிரச்சாரத்திற்கு கூட கொண்டு வரப்படாமல் ஓரம்கட்டுப்பட்டார். முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு வீட்டில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார்.
அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் மட்டுமின்றி ஆர்எஸ்எஸ் சார்பாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளார்.
டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்து வருகின்றனர் . இவர்களின் ஆலோசனையை மீறி ஆர்எஸ்எஸ் மூலம் சவுகான் தலைவராக்கப்படலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications