ரப்பர் ஸ்டாம்ப்.. சொந்த கிராமத்திலேயே கரண்ட் இல்லையே.. திரௌபதி என்ன செய்வார்.. மேதா பட்கர் கேள்வி
திரௌபதி முர்மு தேர்வு குறித்து மேதா பட்கர் கருத்து தெரிவித்துள்ளார்
டெல்லி: யஷ்வந்த் சின்ஹாவின் பொருளாதார முன்னுதாரணம் என்ன செய்ய போகிறது? சொந்த கிராமத்தில் மின்சாரம் கிடைக்காத திரௌபதி முர்முவுக்கு என்ன அதிகாரம் இருக்கும் என்று தெரியவில்லை? என்று குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் குறித்து மேதா பட்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது.. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
இந்த பதவிக்கு திரௌபதி முர்மு என்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின தலைவரை பாஜக முன்னிறுத்தி உள்ளது..

திருமாவளவன்
பாஜகவின் இந்த வேட்பாளர் குறித்து திருமாவளவன் ஒருமுறை சொல்லும்போது, "பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், திரௌபதி முர்முவும் பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், ஜோசியரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், சர்க்கஸ் புலிகள் போன்றுதான் செயல்பட முடியும்.. அவர்களால் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செயல்படுத்துவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

மேதா பட்கர்
முர்முவை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை சமூக ஆர்வலர் மேதா பட்கரும் உறுதிப்படுத்தி உள்ளார்..செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மேதா பட்கர் சொன்னதாவது:

ஆதிவாசிகள்
மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் ஆதிவாசிகள் வாக்கு வங்கியில் பெரும்பங்கு வகிக்கிறார்கள் என்பது பாஜகவுக்கு தெரியும். அதனால்தான், அவர்கள் திரௌபதி முர்மு போன்ற பழங்குடி நபரை விரும்புகிறார்கள் மற்றும் பிர்சா முண்டா ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். வன உரிமைகளை வழங்காமல், காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க திட்டமிடுபவர்களை ஆதிவாசிகளுக்கு ஆதரவானவர்கள் என்று சொல்லிவிட முடியாது..

முர்மு
ஆதிவாதிகள் மற்றும் தலித்துக்களின் நலன்களை பாதுகாக்க, குடியரசு தலைவருக்கும் மட்டுமல்ல, கவர்னருக்கும் அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு. எஸ்சி., எஸ்டி சமூகத்தினரின் எதிரான எந்த சட்டத்தையும் அவர் பயன்படுத்துவதை தடுக்க முடியும். ஆனால் முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரால் முடிந்ததை உடனே செய்துவிட முடியுமா? குடியரசு தலைவர் ஆளும் கட்சியின் ரப்பர் ஸ்டாம்பாக மாறுகிறார் என்றே இதன் அர்த்தம்..

சின்ஹா
ஜனாதிபதி தேர்தல் கட்சி சார்பற்ற போட்டியாக இருந்தும், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வது துரதிஷ்டவசமானதுதான்.. யஷ்வந்த் சின்ஹாவின் பொருளாதார முன்னுதாரணம் என்ன செய்ய போகிறது? சொந்த கிராமத்தில் மின்சாரம் கிடைக்காத திரௌபதி முர்முவுக்கு என்ன அதிகாரம் இருக்கும் என்று தெரியவில்லை? என்றார்.. முர்முவை பாஜக உயர்த்தி பிடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் வேறு விதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications