பக்கா மாஸ் காட்டும் பாஜக..15க்கு 10 தேர்தல்களில் மெகா வெற்றி! காங்கிரஸ் நிலைமை எப்படி? ஒரு ரீவைண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சியும், ஹரியானாவில் பாஜகவும் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் நடந்த தேர்தல்களில் அதிக வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றதா? அல்லது பாஜக பலம் காட்டி இருக்கிறதா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

மக்களவை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடித்த நிலையில், நடந்து முடிந்த ஹரியானா ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி பெற்று பாஜக மகத்தான சாதனை படைத்திருக்கிறது.

bjp congress politics

அதே நேரத்தில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 இடங்களில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 37 இடங்களில் காங்கிரஸும், இந்திய தேசிய லோக் தளம் இரண்டு தொகுதிகளிலும், சுயேட்சைகள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இதேபோல ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் ஆறு இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதே போல மக்கள் ஜனநாயக கட்சி மூன்று தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், சுயாட்சிகள் எழு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

மக்களவை தேர்தலுக்கு பிறகு நடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவும் இந்தியா கூட்டணியும் சரிசமமாக அதாவது இரு மாநிலங்களில் தலா ஒரு மாநிலத்தில் வெற்றியை பெற்றிருக்கின்றன. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. 38 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஆறு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் நடந்த தேர்தல்களில் அதிக வெற்றிகளை பாஜகவே ருசித்து இருக்கிறது.

கடந்த 2023 முதல், திரிபுரா, நாகாலாந்து, கர்நாடகா, மேகலாயா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஹரியானா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது.

அவற்றில் பாஜக கூட்டணி, திரிபுரா, நாகாலாந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஹரியானா, அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.

அதே நேரத்தில், 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் கர்நாடகா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள், காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

சிக்கிம், மேகாலாயாவில் மாநில கட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன. அப்படி பார்க்கும்போது 2023 முதல் இந்தியாவில் நடைபெற்ற 15 சட்டமன்ற தேர்தல்களில் பாஜக 10 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 3 மாநிலங்களிலும், இதர கட்சிகள் 2 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+