வசூல் சாதனை படைத்த பாஜக.. கோடிகளின் குளத்தில் மிதக்கும் தாமரை - மற்ற கட்சிகள் கிட்ட கூட வர முடியாது
டெல்லி: ஆளும் பாரதிய ஜனதா கட்சி, 2020 - 21 நிதியாண்டில் ரூ.477 கோடியை வசூலித்து அனைத்து கட்சிகளையும்விட வசூலில் சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் ரூ.20,000 க்கும் அதிகமாக பெறும் நன்கொடைகள் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்பது விதி.
அந்த வகையில் அரசியல் கட்சிகள் கடந்த ஆண்டுதோறும் தாங்கள் பெற்ற நன்கொடை விபரங்களை ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து வருகின்றன.

ரூ.633.66 கோடி வசூல்
இதை தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் வெளிப்படையாக அறிவிக்கும். அந்த வகையில் கடந்த 2020 - 2021 நிதியாண்டில் இந்திய அரசியல் கட்சிகள் திரட்டிய நன்கொடை விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சிகளுக்கு ரூ.633.66 கோடி நன்கொடை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் வந்துள்ளது.

வசூல் சாதனை படைத்த பாஜக
இதில் வழக்கம்போல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியே முதலிடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக அக்கட்சிக்கு ரூ.477 கோடி நன்கொடையை 2020 - 21 நிதியாண்டில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அதாவது மொத்தமாக அனைத்து கட்சிகள் திரட்டிய நன்கொடையில் 75% பாஜகவுக்கு மட்டுமே சேர்ந்துள்ளது.

கடந்த ஆண்டை விட குறைவு
இம்முறை 2,206 பேரிடம் பாஜக நன்கொடையை பெற்று இருக்கிறது. இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பாஜகவுக்கான வசூல் குறைந்து இருக்கிறது. கடந்த நிதியாண்டில் அக்கட்சி ரூ.785.77 கோடியை நன்கொடையாக பெற்றிருந்தது. கொரோனா ஊரடங்கு, பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் இது குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பரிதாபகர நிலையில் காங்கிரஸ்
எதிர்க்கட்சியான காங்கிரஸை எடுத்துக்கொண்டால், 2020 - 2021 நிதியாண்டில் அக்கட்சி வெறும் ரூ.74 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. இது பாஜகவின் வசூலைவிட 6.5 மடங்கு குறைவாகும். அந்த கட்சிக்கு 1,059 பேர் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். மொத்த கட்சிகளின் வசூலில் காங்கிரஸின் பங்கு வெறும் 11% மட்டுமே. கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.139.01 கோடி நன்கொடையை வசூலித்திருக்கிறது.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்?












Click it and Unblock the Notifications