2000 கோடியை களமிறக்க போகும் பாஜக.. மிரள வைக்கும் தேர்தல் பிளான்!
எம்பி தேர்தல்.. பாஜக செலவு செய்ய போகும் தொகை எவ்வளவு தெரியுமா?
டெல்லி: இந்த முறை பாஜக தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய போகிறது தெரியுமா?
2014-ம் ஆண்டு மோடி ஃபேமஸ் ஆனதே அவர் செய்த கலர் கலர் விளம்பரங்களால்தான்! குஜராத் வரை மட்டுமே அறிந்த மோடியை பட்டிதொட்டி எங்கும் அறிய செய்ததில் முக்கால்வாசி பங்கு மீடியாக்களுக்குதான் போய்ச்சேரும்.
பண மழை கொட்ட கொட்ட உச்சத்தில் கொண்டு போய் மோடியை உட்கார வைத்தது மீடியாக்கள்தான்.
இதன்பிறகுதான் டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா, அச்சே தீன் என்ற சுண்டி இழுக்கும் வார்த்தைகளை கூறி 5 வருடங்களுக்கு முன்பு பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.

செலவு
பொறுப்பேற்றவுடன் எல்லாம் முடிந்துபோய்விடவில்லை. இதுவரை இந்த 5 வருஷங்களில் ரூ.3,000 கோடிக்கு மேல் வெறும் விளம்பரத்துக்காகவே செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த விஷயம் வெளிவந்துள்ளது.

ஆங்கிலம், இந்தி
பிரதமர் சம்பந்தப்பட்ட விளம்பரம் என்று எடுத்து கொண்டால், அதை கண்டிப்பாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. இப்படியெல்லாம் விளம்பரம் செய்யும் பணம் எல்லாமே மக்களின் வரிப்பணம்தான்.

எதிர்க்கட்சிகள்
அதனால்தான், எதிர்க்கட்சிகள் இஷ்டப்படி விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இப்போது திரும்பவும் தேர்தல் வரப்போகிறது. இந்த முறை பாஜக என்னென்ன விளம்பரங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போகிறதோ தெரியவில்லை.

1000 கோடி
ஆனால், கட்சி வாரியான செலவு தொகையை கணக்கிட்டால், பாஜக தரப்பு மட்டும் ரூ.2,000 கோடி செலவு செய்யும் என்ற விஷயம் தெரியவந்துள்ளது. இந்த 2000 கோடியில், 1000 கோடி தேர்தல் பிரச்சாரத்துக்காம். மிச்சம் 1000 ஆயிரம் கோடி எதற்கு தெரியுமா? வேறெதற்கு.. அவ்வளவும் விளம்பரத்திற்குதானாம்!

விளம்பரங்கள்
ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ ரூ.200 கோடியிலிருந்து 250 கோடி ரூபாய்க்கு விளம்பரத்திற்கு செலவு செய்ய உள்ளதாகவும்., திரிணாமுல் காங்கிரஸ் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் பாஜக மாதிரி விளம்பர செலவு ஆகுமா? எந்தெந்த டிசைன்களில், எந்தெந்த ரூபங்களில், மோடியின் விளம்பரங்கள் இருக்க போகிறதோ தெரியவில்லை. ஆனால் மோடியையும் விளம்பரத்தையும் மட்டும் பிரிக்கவே முடியாது!
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications