"முத்திரை பதிக்கும் பாஜக.." அத்தனை எதிர்ப்புகளையும் காலி செய்த அந்த ஒரு மேட்டர்.. பரபர சர்வே முடிவு
டெல்லி: விரைவில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் 7 சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வடகிழக்கு மாநிலங்கள்: இதற்கிடையே 7 சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்பது தொடர்பாக இப்போது லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவை வெளியிட்டுள்ளது. இதில் அங்கே பாஜகவுக்கு தான் பெரிய வெற்றி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தொலைவில் 2ஆவது இடத்தை பிடிக்கும் என்றும் மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக: அங்கு மொத்தம் 11 சீட்கள் இருக்கும் நிலையில், அதில் பாஜக கூட்டணி 6 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியால் அங்கு 2 முதல் 4 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 0-1 இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
காரணங்கள்: இதில் மணிப்பூரைப் பொறுத்தவரை அங்கே கலவரம் நடந்த போதிலும் பிரதமர் மோடி அங்குச் செல்லாத நிலையில், அது மக்களிடையே பாஜக மீது கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சிஏஏ, free movement regime ரத்து ஆகியவையும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தியை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பிராந்திய கட்சிகளும் பாதிக்கப்படுகின்றன. அந்த பகுதியில் கிறிஸ்துவர்கள் கணிசமாக இருக்கும் நிலையில், அவர்கள் கோபமும் அதிகரித்துள்ளது.
இப்படி பாஜக மீது அப்பகுதியில் மக்கள் கடும் கோபத்தில் இருந்தாலும் மோடி பேக்டர் அங்குத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே எதிர்ப்பு கணிசமாக இருந்தாலும் அதைத் தாண்டி மக்கள் வாக்கு பாஜக பக்கம் அதிகம் விழும் என்று லோக்போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரை அங்கே மொத்தம் 11 சீட்கள் இருக்கிறது. அதில் கடந்த தேர்தலில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகளில் இரண்டையும் பாஜக கைப்பற்றியது. மணிப்பூரிலும் மொத்தம் 2 தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக ஒரு இடத்திலும் நாகா மக்கள் முன்னணி ஒரு இடத்திலும் வென்றது. மேகாலயாவில் உள்ள 2 சீட்களில் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி தலா ஒரு இடத்தில் வென்றது. திரிபுராவில் உள்ள 2 இடங்களிலும் பாஜக வென்றது.
மிசோரத்தில் உள்ள ஒரு தொகுதியில் மிசோரம் நேஷனல் ஃபரன்ட், நாகாலாந்தில் உள்ள ஒரு தொகுதியில் என்டிபிபி கட்சி, சிக்கிமில் உள்ள ஒரு தொகுதியில் எஸ்கேஎம் கட்சி வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை எதிர்ப்புகள் சற்று அதிகம் இருந்தாலும் பாஜகவுக்கே வெல்ல வாய்ப்புகள் அதிகம் என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications