நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.. லோக்சபாவில் பாஜகவை கடுமையாக சீண்டிய எம்.பி தம்பிதுரை.. தெறி பேச்சு!
பாஜக கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டு வந்த எந்த திட்டமும் வெற்றி பெறவில்லை என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி:; பாஜக கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டு வந்த எந்த திட்டமும் வெற்றி பெறவில்லை, எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
லோக்சபாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து அதிமுக எம்.பி தம்பிதுரை பேசியது பெரிய வைரல் ஆகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக அதிமுகவில் தனி நபராக தம்பிதுரை பாஜகவிற்கு எதிராக பேசி வருகிறார்.
கடந்த முறை ரபேல் ஒப்பந்தம் குறித்து தம்பிதுரை பேசியது பெரிய விவாதத்தை கிளப்பியது. தற்போது பாஜகவின் அனைத்து திட்டங்களையும் மொத்தமாக விமர்சித்து தம்பிதுரை பேசியுள்ளார்.

பணமதிப்பிழப்பால் பயன்
அவர் தனது பேச்சில், பாஜக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. பணமதிப்பிழப்பின் பயன் என்ன ஏற்பட்டது?. பணமதிப்பிழப்பால் பலரின் வாழ்வாதாரம் பாதித்தது. பணமதிப்பிழப்பால் சிறு, குறு தொழில்கள் மொத்தமாக முடங்கியது.

மாநில உரிமை
மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இப்படித்தான் மாநில அரசுகளுக்கு எதிராக செயல்பட்டது. கடைசியில் தற்போது மாநில கட்சிகளை நம்பும் நிலைக்கு காங்கிரஸ் சென்று இருக்கிறது. பாஜகவும் அந்த நிலைக்கு செல்லும்.

அரசால் வேலைவாய்ப்பு
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் வேலை வாய்ப்பு பெருகவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டம்
மேக் இன் இந்தியா திட்டத்தால் யாருக்கும் பலன் ஏற்படவில்லை. சீனாவின் பொருட்கள்தான் இந்தியாவில் அதிகம் விற்கிறது. தாய்லாந்து உடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் தமிழகம் பாதிக்கிறது. மேக் இந்தியா திட்டம் மூலம் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் எந்த உத்தம பலனும் பெறவில்லை, என்று தம்பிதுரை தனது பேச்சில் குறிப்பிட்டார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications