டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவிற்கு எதிராக திரண்ட 23 கட்சிகள்.. மாபெரும் ஹிட்.. அதிர்ச்சியில் மோடி அண்ட் கோ!

ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து நேற்று கொல்கத்தாவில் நடத்திய மாநாடு பெரிய ஹிட் அடித்து உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து நேற்று கொல்கத்தாவில் நடத்திய மாநாடு பெரிய ஹிட் அடித்து உள்ளது.

நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் கொல்கத்தாவில் பெரிய எதிர்க்கட்சிகளின் மாநாடு நடைபெற்றது. இது மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இதற்கு ஐக்கிய இந்தியா மாநாடு என்று பெயர் வைக்கப்பட்டது. பாஜக கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல இதில் ஒன்று சேர்ந்து இதில் கலந்து கொண்டது.

யாரெல்லாம்

யாரெல்லாம்

இதில் திமுக தலைவர் ஸ்டாலின், மஜத தேசிய தலைவர் தேவ கவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் எம்பி யஷ்வந்த் சின்கா, ஆர்எல்டி தலைவர் அஜித் சிங், தேசிய கான்பிரன்ஸ் தலைவர் பருக் அப்துல்லா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவை சேர்ந்த அதிர்ச்சி தலைவர் சத்ருகன் சின்கா, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆர்ஜெடியின் தேஜேஷ்வி யாதவ், படிதார் ஜாதி இனத்தின் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

எத்தனை கட்சிகள்

எத்தனை கட்சிகள்

மொத்தம் 23 கட்சிகள் சார்பாக தலைவர்கள், தலைவர்கள் அனுப்பிய முக்கிய தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வளவு பெரிய மாநாட்டை இந்திய அரசியல் வரலாறு இதுவரை பார்த்ததே இல்லை. இத்தனை கட்சிகள் தேர்தல் கூட்டணிக்காக கூடியதும், ஒரே கட்சிக்கு எதிராக பேசியதும் இதுவே முதல்முறையாகும்.

4 மணி நேரம்

4 மணி நேரம்

இந்த மெகா கூட்டத்தில் தலைவர்கள் எல்லோரும் மொத்தம் 4 மணி நேரம் பேசினார்கள். இந்திய அரசியல் வரலாற்றில் இதுதான் மிக முக்கியமான நான்கு மணி நேரமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் கூட்டணி , மத அரசியல், மக்கள் பிரச்சனை, வாக்கு எந்திரத்தின் பிரச்சனை, மாநில சுயாட்சி என்று பல விஷயங்கள் குறித்து இதில் எல்லோரும் பேசியது குறிப்பிடத்தக்கது.

பெரிய கூட்டம்

பெரிய கூட்டம்

பாஜக தொடங்கி யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு இந்த மாநாட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல லட்சம் மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. லோக் சுபா தேர்தல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட கூட்டங்களில் இதுதான் மாஸ் ஹிட் அடித்த மாநாடு என்றும் கூறப்படுகிறது.

பாஜக அதிர்ச்சி

பாஜக அதிர்ச்சி

இது பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி கானல் நீர் போல மறைந்துவிடும் என்று நினைத்த பாஜகவிற்கு இது கலக்கத்தை அளித்துள்ளது. முக்கியமாக மோடி - அமித் ஷா அன்கோவிற்கு இது பெரிய கலக்கத்தை கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தை பேசிக்கொள்கிறார்கள்.

English summary
BJP in Huge Worry: Mega opponent meet in West Bengal became a HIT with 23 parties present.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X