டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டில் அடிப்படைகள் வலுவாக இருக்கக் காரணம் என்ன தெரியுமா? பதிலளித்த நிதியமைச்சர்

Google Oneindia Tamil News

டெல்லி: 2014ஆம் ஆண்டுக்கு பின் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால் மட்டுமே நாட்டின் அடிப்படைகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செபி அமைப்பின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்டு பேசிய நிதியமைச்சர் 2014ஆம் ஆண்டுக்கு பின் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் மட்டுமே நாட்டின் அடிப்படைகள் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

எந்த மதமும் பலவீனமல்ல! அல்கொய்தா மிரட்டலை கண்டிங்க! மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிவசேனா ‛அட்வைஸ்’ எந்த மதமும் பலவீனமல்ல! அல்கொய்தா மிரட்டலை கண்டிங்க! மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிவசேனா ‛அட்வைஸ்’

செபி தலைவருக்கு வாழ்த்து

செபி தலைவருக்கு வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், செபி அமைப்பின் தலைவரான மாதபி பூரி கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்தார். அவர் இங்கு இருந்திருக்க வேண்டும், இருந்திருந்தால் நிச்சயம் பங்கேற்று பேசியிருப்பார். அவர் மீண்டும் அதே உற்சாகத்துடன் வருவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

வலைதளம் அறிமுகம்

வலைதளம் அறிமுகம்

தொடர்ந்து புதிய இ ட்ராக்கிங் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் தளமான நேத்ரா தளத்தை அறிமுகம் செய்துவைத்தார். அதேபோல் இந்திய வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டத்திற்கான ஐடியாஸ் மொபைல் செயலியையும் தொடங்கி வைத்தார்.

பாஜக ஆட்சி பற்றி நிதியமைச்சர்

பாஜக ஆட்சி பற்றி நிதியமைச்சர்

இதன்பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், 2014 முதல் பாஜக அரசு எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் அடிப்படைகள் மீண்டும் உறுதியாக இருக்கிறது. கொரோனா பரவலுக்கு முன் அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகளான கார்ப்பரேட்களுக்கான வரி குறைப்பு, பொருளாதாரம் பெருமளவில் டிஜிட்டல் மயமாக்கப்படுவதை உறுதிசெய்தது, ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமலுக்கு கொண்டு வந்தது ஆகியவை இந்த சூழ்நிலைக்கு இந்தியாவை தயார்படுத்தியது என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பாராட்டு

நிர்மலா சீதாராமன் பாராட்டு

கொரோனா பரவலின் போது அரசு இலக்கு வைத்து செயல்பட்ட அணுகுமுறை, பெரிதும் உதவியதாக தெரிவித்தார். அப்போது பொருளாதார விவகாரங்கள் துறை தரப்பில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு நாட்டின் ஏராளமான பகுதிகளிலும் உதவிகளை வழங்கியது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உட்கட்டமைப்பு மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்திற்கு ஏற்பவும் நிதி வழங்கப்பட்டது என பொருளாதார விவகாரங்கள் அமைச்சகத்துக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.

English summary
Finance Minister wishes a speedy recovery to SEBI Chairman Puri. Then She spoke about the Indian Economy and
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X