தென்னிந்தியாவில் அடித்து நொறுக்கும் பாஜக? கடந்த முறையை விட அதிக சீட்களில் வெல்லுமாம்! நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைவருக்கும் பெரிய ஷாக் கொடுக்கும் வகையில் தென்னிந்தியாவில் பாஜக கடந்த முறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வெல்லும் என்றே பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது எக்சிட் போல் சர்வேக்கள் வெளியாகி வருகிறது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress

இதில் பெரும்பாலான சர்வேக்களில் பாஜகவே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கடந்த முறையைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் வென்றாலும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.

தென்னிந்தியா: மேலும் தென்னிந்தியா குறித்த சர்வே முடிவுகள் பலருக்கும் ஷாக் கொடுப்பதாக இருந்துள்ளது. தென்னிந்தியாவில் இந்த முறை பாஜக அதிக இடங்களில் வெல்லும் என்று பிரதமர் மோடி தொடங்கி அனைவரும் கூறி வந்த நிலையில், எக்சிட் போல் முடிவுகளும் கிட்டதட்ட அதையே தான் காட்டுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் பாஜகவால் 30 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி (அதிமுக- 1) ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. மற்ற 38 தொகுதிகளையும் திமுக- காங்கிரஸ் கூட்டணியே வென்றது. கேரளாவில் மொத்தம் 20 சீட்கள் இருக்கும் நிலையில், அதில் 19இல் காங்கிரஸ் கூட்டணி வென்றது. இடதுசாரிகள் ஒரு இடத்தில் வென்றது. பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

கடந்த முறை: ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 25 தொகுதிகள் இருந்த நிலையில், அதில் 22 சீட்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்றது. தெலுங்கு தேசம் மீதமுள்ள 3 தொகுதிகளில் வென்றது. தெலுங்கானாவில் 17 சீட்கள் இருக்கும் நிலையில், பிஆர்எஸ் 9, பாஜக 3, காங்கிரஸ் 3, மஜ்லீஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றது.

கடந்த 2019இல் கர்நாடகாவில் மட்டுமே பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. அங்குள்ள 28 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பாஜகவே வென்றது. காங்கிரஸ் கூட்டணியால் இரண்டு இடங்களில் மட்டுமே வெ்ல முடிந்தது.

தென்னிந்திய மாநிலங்கள்: ஆனால், இப்போது 5 ஆண்டுகளில் பாஜக தென் இந்தியாவில் வளர்ந்துள்ளதைப் போலவே எக்சிட் போல் முடிவுகள் காட்டுகிறது. தென் இந்தியாவில் கணிசமான இடங்களில் பாஜக வெல்லும் என்றே பெரும்பாலான சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக டிவி 9 எக்ஸிட் போல் சர்வேயில் தெலுங்கானாவில் 7 இடங்கள், கர்நாடகாவில் 20 இடங்கள், தமிழகத்தில் 4 இடங்கள், ஆந்திராவில் 12 இடங்கள் கேரளாவில் ஒரு இடத்தில் பாஜக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதைக் கூட்டிப் பார்த்தால் தென்னிந்தியாவில் பாஜக கூட்டணி 44 இடங்களில் வெல்லும்.

அதேபோல டுடே சாணக்யா சர்வே படி தெலுங்கானாவில் 12 இடங்கள், கர்நாடகாவில் 24 இடங்கள், தமிழகத்தில் 4 இடங்கள், ஆந்திராவில் 22 இடங்கள் கேரளாவில் 4 இடங்கள் இடத்தில் பாஜக வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இதைக் கூட்டிப் பார்த்தால் தென்னிந்தியாவில் பாஜக கூட்டணி 66 இடங்களில் வெல்லும்.

ஷாக்: பெரும்பாலான சர்வேக்களில் தென் இந்தியாவில் கடந்த முறையைக் காட்டிலும் பாஜக கூடுதல் இடங்களிலேயே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்குத் தென்னிந்தியாவில் பலம் இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அதை முறியடிக்கும் வகையில் இந்த முறை தென்னிந்தியாவில் பாஜக கணிசமான இடங்களில் வெல்லும் என எக்சிட் போல் சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+