அடித்து நொறுக்கும் பாஜக! வட மாநிலங்களில் அப்படியொரு ஆதரவு.. அப்போ காங்.? பரபர லோக்சபா தேர்தல் சர்வே
டெல்லி: விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும் என்பது குறித்து லோக் போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய கட்சிகளும் ஏற்கனவே இந்த தேர்தலுக்காக பணிகளை ஆரம்பித்துவிட்டன.

ஒரு பக்கம் பாஜக தனது என்டிஏ கூட்டணி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. மறுபுறம் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
பிரதான கட்சிகள்: கடந்தாண்டு இறுதியில் நடந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் 3இல் பாஜக ஆட்சியை அமைத்த நிலையில், அந்த தேம்புடன் தேர்தலைச் சந்திக்கிறது பாஜக.. இதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சார பாடல் ஒன்றையும் பாஜக வெளியிட்டு இருந்தது. கூட்டணி ஒரு பக்கம் இருந்தாலும் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பாஜக பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது.
மறுபுறம் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. நிதிஷ்குமார் விலகியுள்ளது இந்தக் கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தினாலும் கூட, அடுத்தகட்ட நடவடிக்கையில் இந்தக் கூட்டணி தலைவர்கள் இறங்கியுள்ளனர். வரும் நாட்களில் தொகுதிப்பங்கீடு குறித்துப் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கிடையே லோக் போல் அமைப்பு கோவா, உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்திய சர்வே குறித்த முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
புது சர்வே: யூனியன் பிரதேசமான கோவாவில் மொத்தம் இரண்டு லோக்சபா இடங்கள் உள்ளன. அதில் பாஜக 1-2 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அங்கே காங்கிரஸ் கட்சி 0-1 இடத்தில் மட்டும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல வடமாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 5 லோக்சபா இடங்கள் இருக்கிறது. அதில் பாஜக 2-3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி அங்கே 1-2 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு வடமாநிலமான உத்தரகண்ட்டில் மொத்தம் 5 எம்பி தொகுதிகள் இருக்கிறது. அங்கே பாஜக அப்படியே வெல்லும் என்று லோக் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அங்கே பாஜக 4-5 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக பாஜக கூறுகிறது. மறுபுறம் காங்கிரஸ் அங்கே 0-1 இடத்தை மட்டுமே பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் எத்தனை: இந்த மூன்று மாநிலங்களில் மொத்தமாக 11 இடங்கள் இருக்கிறது. அதில் அதிகபட்சமாக பாஜக 7 முதல் 10 இடங்களில் பாஜக வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் 1 முதல் 4 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தென்னிந்திய மாநிலங்கள் குறித்த சர்வேயை சமீபத்தில் இந்த அமைப்பு வெளியிட்டு இருந்தது. அதில் தென்மாநிலங்களில் மொத்தம் உள்ள 132 இடங்களில் இந்தியா கூட்டணி 83 இடங்களிலும் பாஜக கூட்டணிக்கு 18 இடங்களிலும் வெல்லும் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications